திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ்
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் வட்டத்தில் இருக்கக்கூடிய ஆவூர் கிராமத்தில் விவசாய நிலத்திற்கு வரக்கூடிய நீர்வழி கால்வாயை ஆக்கிரமித்து, டாஸ்மாக் மது கடை கட்டப்பட்டு அதில் இயங்குகிறது.
இது சம்பந்தமாக ஆவூர் கிராம மக்கள் எங்கள் கிராமத்திற்கு வரவேண்டிய நீர்வரத்து கால்வாயை விவசாய பாசனத்திற்கு பயன்படுத்தி தருமாறு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இந்த மனுவும் மக்கள் குறை தீர்க்கும் நாளில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மாவட்ட ஆட்சியர் அதை கிடப்பில் போட்டுவிட்டு, டாஸ்மாக் மது கடையை நீர்வழி கால்வாய் மீது அமைத்து டாஸ்மாக் மதுக்கடைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது திமுக அரசின் மாவட்ட நிர்வாகம்.
இது பற்றி இனி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? - கிராமப் பொதுமக்கள்.