பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு ஒரு டம்மியான அமைச்சரை போட்டு இருக்கிறார். அவர் செய்தித் துறையில் உள்ள பிரச்சனைகளுக்கு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார்? மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில், மத்திய மாநில அரசின் செய்தித்துறை அவலங்கள் குறித்து, பல்வேறு செய்திகள் ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறோம். அது இணையதளத்திலும் வெளிவருகிறது.இதையெல்லாம் மத்திய அரசின் செய்தித்துறை அதிகாரிகள் அவரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறார்களா?இல்லையா? என்று எனக்கு தெரியவில்லை.மேலும்,
அமைச்சராவது எத்தனையோ முறை இணையதளத்தின் செய்திகளை அனுப்பி இருக்கிறோம். அவர்களுடைய பி.ஏ க்களாவது அதைப் பற்றி அவருக்கு சொல்லி இருக்கிறார்களா? இதையெல்லாம் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல, ஒரு அமைச்சருக்கு தகுதி இல்லை என்று நினைக்கும் போது வேதனையாக உள்ளது.
இத்தனை ஆண்டுகள் மத்திய செய்தித் துறையின் அமைச்சராக இருந்து தமிழ்நாட்டுக்காக இந்த சமூக நலன் பத்திரிகைகளுக்கு இவர் செய்தது என்ன?
எங்களுடைய பிரச்சனைகள், கோரிக்கைகள் பற்றி மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் பலமுறை செய்திகளாக வெளியிட்டு இருக்கிறோம். இது சம்பந்தமாக அவரை சந்திக்கவும், பலமுறை போனில் தொடர்பு கொண்டு, நேரம் கேட்டிருக்கிறோம்.ஆனால், எந்த பதிலும் இல்லை.
இச் செய்தியை மத்திய உளவுத்துறை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லுமா?
ஆசிரியர்.