நாட்டில் எத்தனையோ நீதிபதிகள் இருக்கிறார்கள் ஆனால், சமூகத்தின் மீது பொறுப்புள்ள நீதிபதியாக ஆனந்த வெங்கடேஷ் செயல்படுவதால், எமது மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள்.
நீதித்துறையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பல வழக்குகளை தாமாக முன்வந்து எடுத்து விசாரிக்கிறார். இதுதான் நீதித்துறையின் சிறப்பு. இவரால் நீதித்துறைக்கு சிறப்பு. ஒரு அமைச்சர் பொதுவெளியில் சைவத்தையும், வைணவத்தையும் பாலியல் பெண்களோடு ஒப்பிட்டு பேசி இருப்பது, எவ்வளவு மத உணர்வாளர்களை அது புண்படுத்தி இருக்கும்? இதுவெல்லாம் தெரியாமல் மந்திரி சீட்டில் உட்காருவதற்கு உனக்கு என்ன தகுதி?
இது பற்றி பெண்கள், மற்றும் ஆண்கள் சோசியல் மீடியாக்களில் இவரை பின்னி பெடல் எடுத்து இருக்கிறார்கள். அது ஒரு புறம் என்றால், இவர் மீது அவதூறு வழக்கை காவல்துறை பதிய வைத்து அதை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று டிஜிபிக்கே உத்தரவு போட்டுள்ளார்.
நாட்டில் நீதிபதிகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒன்று. இப்படிப்பட்ட அராஜகமான அரசியல்வாதிகளுக்கு, சிம்ம சொப்பனமாக ஆனந்த் வெங்கடேஷ் இருந்து வருகிறார். இவரால் நீதித்துறைக்கு பெருமை.மேலும்,
இதனால், அமைச்சரின் பதவி பறி போகுமா?100% வாய்ப்புகள் உள்ளது. ஒரு அமைச்சர் மீது எஃப் ஐ ஆர் போட்டால், அடுத்த நிமிஷம் கவர்னர் (R.N. RAVI) ,முதலமைச்சருக்கு கடிதம் வைப்பார். அவரை பதவியில் இருந்து நீக்குங்கள். இதற்கும் இவர்கள் நீதிமன்றத்தில் போய் நின்று மன்னிப்பு கேட்பார்களா? அல்லது தடை வாங்குவார்களா? வழக்குத் தொடர்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.