பாஜகவில் கடும் போட்டிக்கு இடையில் நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். இவரால் பிஜேபி அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணியாக வழிநடத்துவாரா?

 

பிஜேபியின் மாநில தலைவராக அண்ணாமலை ஒரு பக்கம் மூன்று வருட காலம் முடிவடைந்த நிலையில் ஒரு வருட காலத்திற்கு மேலாக மீண்டும் அவரை தலைவராக இருந்து வந்துள்ளார். 

அவரால் பிஜேபியின் வளர்ச்சி தமிழகத்தில் பேசு பொருளானது. இந்த நிலையில் 2026 தேர்தலில், பிஜேபி சந்திக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு கூட்டணி அவசியம் என்பதை பிஜேபியின் தலைமை உணர்ந்து இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு முட்டுக்கட்டையாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணாமலையின் பேச்சு இருந்தது. அதை சாணக்கிய தனமாக மோடி அமித்ஷா, அண்ணாமலையை தற்போது இறக்கி ஓரமாக வைத்திருக்கிறார்கள். 

தமிழ்நாட்டின் அரசியல் திராவிட கட்சிகளுக்கு இணையாக போட்டி போடும் அளவிற்கு பிஜேபி அதே பாணியில் சென்று கொண்டிருக்கிறது. பிஜேபியின் பழைய வரலாற்றில் பிஜேபி இல்லை .இதுவும் ஒரு திராவிட கட்சி பாணியில் தான் இப்போது இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஏற்கனவே அதிமுகவில் பதவி வகித்தவர் நாயனார் நாகேந்திரன். இப்போது இவர் பிஜேபியில் மாநில தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பது இரண்டு கட்சிகளுக்கும், ஒரு சமூகமான ஒரு தீர்வை ஏற்படுத்த முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

 தவிர, இவரை தலைமை தேர்வு செய்தாலும், போட்டிக்கு பல பேர் அண்ணாமலையை தூக்கியவுடன் வரிசையில் டெல்லிக்கு காவடி தூக்கினார்கள். அந்த வகையில் போன்ற ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன், இது தவிர, கருப்பு முருகானந்தம் இன்னொருவர் பெயர் ஆர் எஸ் எஸ் ரெக்கமண்டேஷன் அய்யாசாமி என்று நினைக்கிறேன். அந்த அளவிற்கு அவர் ஒரு பிரபலமானவர் என்று இல்லை என்றாலும், அவரும் இந்த போட்டியில் இருந்தார். 

இப்படிப்பட்ட கடும் போட்டிகளுக்கு இடையில் இவருக்கு பக்க பலமாக இருந்தது எடப்பாடி பழனிசாமி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் மறைமுகமாக இவருடைய பெயரை டிக் அடித்து விட்டார். மீதி இருப்பவர்கள் யார்? யாரை பிடிக்க வேண்டுமோ, அவர்களை எல்லாம் பிடித்து பார்த்து விட்டு விட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு கடும் போட்டி நாயனார் நாகேந்திரன் பிஜேபியில் மாநில தலைவராக போட்டியின்றி வெற்றி பெற்றார். 

ஆனால், தலைமை இவருக்கு கடுமையான நிபந்தனைகள், செயல்பாடுகள் கொடுத்து ,இதை எல்லாம் முடிக்க வேண்டும் என்ற ஒரு அசைன்மெண்டும் கொடுக்கப்பட்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக 

 எதிர்க்கட்சிகளின் ஊழல் பட்டியல் மற்றும் எந்தெந்த மாவட்டங்களில் திமுகவினரின் அராஜகங்கள்? ஒவ்வொன்றாக பட்டியல் எடுத்து அரசியல் களத்தில், திமுக அணிக்கு எதிராக மக்களிடம் கொண்டு செல்வார்கள். அதேபோல், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி இதுவரை ,திமுகவை எதிர்த்து அரசியல் செய்ய பின் தங்கிய நிலையில்,இருந்த அவர் இப்போது வேகம் எடுப்பார். இந்த இரண்டு கட்சிகளின் அரசியல் எதிர்ப்பு, ஆளும் கட்சியான திமுக எப்படி எதிர்கொள்ளப் போகிறது?என்பதுதான் மிகப்பெரிய சவால்கள். 

தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுகவுக்கு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ப்த்தி, நிர்வாக சீர்கேடுகள், எதுவும் சரியான முறையில் நடவடிக்கை எடுக்காமல், மக்கள் படும் துன்பங்கள், அமைச்சர்களின் பேச்சு, ஊழல் விவகாரங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, அரசு ஊழியர் பிரச்சனை, என்று பல்வேறு பிரச்சனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். 

இவையெல்லாம் தேர்தல் நேரத்தில் அதிமுக, பிஜேபி கூட்டணி மக்களிடம் உச்சபட்சமாக கொண்டு செல்வார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதுவெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தேர்தல் நேரத்தில் சமூக நலன் பத்திரிகைகளை அலட்சியமாக பார்த்த திமுக அரசுக்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும், இந்த பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் நிச்சயம் திமுகவின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றாமல் விடமாட்டார்கள். அந்த அளவிற்கு அரசு அடையாள அட்டை முதல் நல வாரிய உறுப்பினர்கள், சலுகை, விளம்பரங்கள், இவை எல்லாம் கார்ப்பரேட் மீடியாக்களுக்கே சொந்தமாக்கிவிட்ட திமுக அரசுக்கு நிச்சயம் மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தும் முக்கிய வேண்டுகோள். மேலும்,

 மக்கள அதிகாரம் பத்திரிக்கை இணையதளத்தில் இணைந்து இருக்கக்கூடிய  பல்வேறு சமூக நலன் பத்திரிகைகள் இதற்கு ஆதரவளித்து, நம்முடைய எதிர்ப்பு குரலை தேர்தல் களத்தில் செயல்படுத்தி காட்ட வேண்டும் என்பதுதான், அனைவருக்கும், மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பிலும், இணையதளத்தின் சார்பிலும், சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும், இது நம் பத்திரிகை சுதந்திரத்தின் உரிமை என்பதை உணர்ந்து போராட முன் வர வேண்டும்.என்று அனைவரையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். 

இது நம் பத்திரிகையின் மீது தொடுக்கப்பட்ட ஒரு போர் என்றுதான் நாம் நினைக்க வேண்டி உள்ளது. பத்து ஆண்டுகளாக அந்த வலியும், வேதனையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதைப்பற்றி எத்தனையோ முறை அதிகாரிகளுக்கு தெரிவித்திருக்கிறோம் .ஒவ்வொரு இதழிலும், அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறோம். பலன் இல்லை. மேலும், இந்த திமுக ஆட்சியில் இவர்கள் செய்கின்ற வீண் செலவும், ஊழலும் அதில் ஒரு சதவீதம் செலவு செய்தால் கூட ,நமக்கு கொடுக்க வேண்டிய அரசின் சலுகை, விளம்பரங்கள் கிடைத்துவிடும். எனவே,மக்கள் அதிகாரம் பத்திரிகையின் இணையதளமான பேஸ்புக்கில் ஆயிரக்கணக்கான பத்திரிகை மற்றும் பத்திரிக்கையாளர்கள் இருக்கிறீர்கள், ஒத்த கருத்து உடையவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்.தவிர,

 தேர்தல் களத்தில் முக்கிய பங்காக சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிக்கையாளர்கள் போராட்டத்தின் வலிமை என்ன? என்பதை ஆட்சியாளர்களுக்கும், திமுகவுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய பத்திரிகைகளுக்கும் காட்டுவது தான், நம் போராட்டத்தின் வலிமை என்பதை சமூக நலன் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகள் புரிந்து கொண்டால் சரி.



Popular posts
Tamil Nadu Government Journalists Identity Card? Or circulation ID card of magazines? Can you give a proper explanation for this? - Press Officers.
படம்
பறையர் இன மக்களுக்கு தங்கள் வரலாறு தெரியாமல், ஆளுக்கு ஒரு கருத்து பேசுகிறார்கள் . இதுபற்றிய கடந்தகால வரலாற்று உண்மைகள் என்ன?
படம்
தமிழக ஆளுநர் ஆர். என். ரவி அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்பட்டார் என்று சட்டத்தை மீறிய தவறான தீர்ப்பா? - உச்சநீதிமன்றம்.
படம்
உச்ச நீதிமன்றத்தில்! தமிழ்நாட்டில் கவர்னருக்கு எதிராக கொடுக்கப்பட்ட தீர்ப்பு, கூட்டாட்சி தத்துவத்தின் முக்கியத்துவமா?
படம்