மக்கள் அதிகாரம் செய்திக்கு பின் தற்போது கார்ப்பரேட் பத்திரிகைகளின் போலி ஊடக பிம்பத்தை உடைத்து மக்களிடம் உண்மையை வெளிப்படுத்தி இருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று. - youtube சேனல் தமிழா, தமிழா பாண்டியன் மற்றும் நேதாஜி மக்கள் கட்சியின் நிறுவனர்- வரதராஜன்.

 மக்கள் அதிகாரம் செய்திக்கு பின் தற்போது கார்ப்பரேட் பத்திரிகைகளின் போலி ஊடக பிம்பத்தை உடைத்து மக்களிடம் உண்மையை வெளிப்படுத்தி இருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று. - youtube சேனல் தமிழா, தமிழா பாண்டியன் மற்றும் நேதாஜி மக்கள் கட்சியின் நிறுவனர்- வரதராஜன்.


தமிழ்நாட்டில் கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளை எதிர்த்து செய்திகளை முதன்முதலில் வெளியிட்ட ஒரே பத்திரிக்கை அது மக்கள் அதிகாரம். இந்த உண்மை மக்கள் அதிகாரம் பத்திரிக்கையிலும், இணையதளத்திலும், படிக்கின்ற வாசகர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும், நிச்சயம் மக்கள் அதிகாரம் பத்திரிகை தெளிவுபடுத்தி இருக்கிறது. 

இதைப் பற்றி சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வெளியிட்ட ஒரே பத்திரிக்கை.மேலும், இன்று யூடியூப் சேனல் விமர்சகர் தமிழா, தமிழா, பாண்டியன் இன்னும் ஒரு படி மேலே சென்று, இந்த அரசு விளம்பரத்திற்காக நடத்தப்படும் ஒரே பத்திரிக்கை தினத்தந்தி ,இது தமிழ்நாட்டை குட்டி சுவர்ராக்குவதற்காகவே இவர்கள் இந்த பத்திரிகை, தொலைக்காட்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதாவது அவர் சொல்வது கருணாநிதியின் கைக்கூலியாகவே தினத்தந்தி ஆதித்தனார் இருந்தார் என்பது வெட்ட வெளிச்சமான உண்மை. 

இதற்குப் பின்புலத்தில் ஒரு ரகசியம் இருக்கிறது. அது என்னவென்றால், இந்த தினத்தந்தி அலுவலகம் கூட, அது மடக்கப்பட்ட சொத்து தான் .அதாவது பணம் கொடுத்து வாங்கியது இல்லை என்று தான் தகவல் தெரிவிக்கிறார்கள். அந்த காலத்தில் யார் கேட்டிருக்கப் போகிறார்கள்? ஊருக்கு நாலு பேர் கூட ஓடாத நேரத்தில் ஒருவர் ஓடி ,நான் தான் முதல் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று இருக்கிறேன் என்று பேசிக் கொண்டிருப்பது போல, இந்த தினத்தந்தி ,தினமலர், தினமணி இவை எல்லாம் இப்போது பேசிக் கொண்டிருக்கிறது. 

இன்று தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 1 லட்சம் பத்திரிகைகள்(RNI) இருப்பதாக தகவல். இந்த ஒரு லட்சம் பத்திரிகைகளோடு போட்டி போட்டு பத்திரிக்கை நடத்துவது, இவர்கள் எல்லாம் தற்போது இவர்களுடைய திறமை என்னவென்று மக்களுக்கு புரிந்து, இப்போது ஒரு கோடி வாசகர்கள் போய்,ஒரு லட்சம் வாசகர்களுக்கும் குறைவாக குறுகி விட்டார்கள்.மேலும், 

இப்போது ஆடு, மாடு மேய்க்கும் போது கூட மக்கள் செல்போன் வைத்து செய்தியை படித்துக் கொண்டிருக்கிறார்கள். இது காலம் மாற்றம். இந்த மாற்றத்தைக் கூட செய்தித்துறை அதிகாரிகள் புரிந்து கொள்ளாமல், இன்னும் ஊழல்வாதிகளுக்கும், ஊழல் அரசியலுக்கும் துணை போகக் கூடிய பத்திரிகைகளுக்கு மட்டுமே கோடிக்கணக்கான சலுகை, விளம்பரங்களை கொடுத்து கொண்டு இருக்கிறார்கள் என்றால், செய்தி துறை ஊழலை வளர்க்கும் துறையாக தான் இருந்து வருகிறது. அதற்கு தான் இவர்கள் சலுகை, விளம்பரங்களை மக்களுடைய வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 அப்படி என்றால் நாட்டு மக்களை பற்றி சிந்திக்காத இவர்கள் ,ஊழலுக்கு துணை போகக்கூடிய அதிகாரிகளாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், இவர்களையும் இந்த ஊழல் பின்னணியில் சேர்த்து நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும். கடந்த எடப்பாடி ஆட்சியில் மட்டும் வெற்றி நடை போடுகிறது தமிழகமே, என்ற விளம்பரங்களை அள்ளிக் கொடுத்து, ஒரு ஓய்வு பெற்ற இணை இயக்குனர் செய்து துறையில் என்னிடம் சொன்னது, 1700 கோடி கொடுத்ததாக தகவல் .

பிறகு, இந்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்திற்கு திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது, இதைக் கொண்டு சென்றது .அங்கே 750 கோடி என்று தான் கணக்கு காட்டப்பட்டது என்ற தகவல் .மேலும், இந்த நிதி எப்படி? அது ஊழல் கணக்கிலே, ஊழலாக போய் சேர்ந்தது ?என்பது தெரியவில்லை .இப்படி எல்லாம் பல ஊழல்கள் செய்தித் துறையில் அரங்கேறி கொண்டு இருக்கிறது. இதை மறைப்பதற்கு அதிகாரிகள் சமூக நலன் பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்களை கொடுக்கக் கூடாது என்பதில் ஒரே குறிக்கோளாக இருக்கிறார்கள் .

தவிர, இவர்கள் இந்த ஊழலுக்கு ஒத்து ஊதக்கூடிய பத்திரிகைகளின் ஏஜென்ட்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய இந்த பத்திரிகைகளின் நிலைமை.மேலும்,  செய்தித்துறை இயக்குனர், செய்தித் துறை செயலாளர் ,இவர்கள் எல்லாம் இவர்களோடு கூட்டி சேர்ந்து பத்திரிக்கை துறையை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,இதே போல் நேதாஜி மக்கள் கட்சி நிறுவனர் வரதராஜன் மற்றும் யூடியூப் பேச்சாளர் இவரும் தற்போது மக்களிடையே கார்ப்பரேட் பத்திரிகைகளின் நிலைமையை மக்களுக்கு எடுத்துச் சொல்லியுள்ளார். 

உண்மையை சொல்வதற்கு தான் பத்திரிக்கை மற்றும் மீடியாக்கள் அது ஊழலுக்கு மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ துணை போக கூடிய பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் தமிழ்நாட்டில் நானும் பத்திரிகை மீடியா என்று சொல்லிக் கொள்வதில் எத்தனையோ முறை எழுதி விட்டேன் .அதில் எந்த அர்த்தமும் இல்லை. மக்களிடம் விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும் அதுதான் பத்திரிகை, அதுதான் தொலைக்காட்சி .மக்கள் தெரியாத உண்மைகளை தெரிந்து கொள்வதற்காக தான் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் இருக்க வேண்டும் .

ஆனால், இன்றைய அரசியலும், அரசியல்வாதிகளும் ,அரசியல் கட்சிகளும், தன்னுடைய சுயலாபங்களுக்காக இருப்பது போல், இருந்தால்! மக்கள் அதை படிப்பது, பார்ப்பது வீண். எனவே, செய்தித் துறை ஊழல் பத்திரிகைகளுக்கும், நாட்டில் ஊழலை வளர்க்கும் அரசியல் கட்சிகளுக்கும், பக்க பலமாக இருக்கிறது என்பதுதான் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிகப்பெரிய உண்மை. 

இதை நீதித்துறை நன்கு அறிந்து கொண்டு, இதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்தினால் தான் இந்த பத்திரிக்கை துறையை காப்பாற்ற முடியும் .இல்லையென்றால் மிகப்பெரிய கேவலமான நிலைக்கு பத்திரிக்கை துறை கொண்டு சேர்ப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.



Popular posts
பறையர் இன மக்களுக்கு தங்கள் வரலாறு தெரியாமல், ஆளுக்கு ஒரு கருத்து பேசுகிறார்கள் . இதுபற்றிய கடந்தகால வரலாற்று உண்மைகள் என்ன?
படம்
பத்திரிக்கை என்றால் என்ன? எது பத்திரிக்கை?
சிவவாக்கிய சித்தரின்! ஆன்மீக கொள்கை, செயல்பாடுகள் பற்றிய உண்மைகள் .
படம்
இந்திய தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை மற்றும் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க, ஆன்லைன் ஓட்டு பதிவு கொண்டு வந்து, அதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா? மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம்.
படம்
நாட்டில் கருப்பு பணமும்! ஊழலும்! உழைப்பவன் முன்னேற்றத்திற்கு அரசியல் என்பதைவிட, இன்று ஊரை ஏமாற்றுபவன் முன்னேற்றத்திற்கு அரசியல் ஆகிவிட்டது. இது யார் தவறு?மக்களா? அல்லது அரசியல்வாதிகளா?
படம்