அதிமுக வா? திமுக வா? பிஜேபியா ?தேமுதிகவா ?பாமகவா? விடுதலை சிறுத்தைகளா?, மதிமுக வா? கம்யூனிஸ்டுக்களா ?நாம் தமிழர் கட்சியா? அல்லது புதிதாக ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக்கழகமா?எந்த அரசியல் கட்சி ?
முதலில் நம் தமிழக மக்களுக்கு ஊழல் என்றால் என்ன என்று தெரியாது. அதன் பின் விளைவு என்ன? என்பதும் தெரியாது அதன் பாதிப்புகளும் என்ன? என்பதும் தெரியாது. அதை பற்றிய ஒரு முக்கிய செய்தி கட்டுரை தான் இது. மேலும்,
ஊழல் என்பது பற்றி தெரியாத மக்கள், ஏதோ அவர்கள் நம்முடைய பணத்தை எடுத்துக் கொண்டு போகவில்லை .அரசாங்க பணத்தை தான் எடுத்துச் செல்கிறார்கள் என்று நினைக்கிறார்கள். இந்த விஷயம் பத்திரிக்கையில் செய்தியாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு கூட 90 சதவீதத்துக்கு மேல் தெரியாது.
ஊழல் என்பது இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சிதைக்கும் வேலை. அது ஒருபுறம். மற்றொருபுறம் சாமானிய மக்கள் அதாவது ஏழை ,எளிய நடுத்தர மக்கள், தங்களுடைய உழைப்பால் முன்னேற முடியாது. கார்ப்பரேட் கம்பெனிகள், முதலாளி வர்க்கம் இவர்கள்தான் முன்னேறுவார்கள். நாட்டில் வறுமை கோட்டுக்குள்ள மக்கள், அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
அதாவது உழைப்பவனை சுரண்டி, எல்லோரும் மேலே போய் கொண்டிருப்பார்கள். ஆனால், உழைப்பவன் முன்னேற முடியாது. இதற்கு ஒரு சிறிய உதாரணம், மக்கள் புரிந்து கொள்ளும்படி கொடுக்கிறேன். அது என்ன? என்றால், பலமுறை இந்த பத்திரிகை விஷயங்களைப் பற்றி எழுதக் கூடிய ஒரே பத்திரிக்கை, மக்கள் அதிகாரம் தான். எங்களுடைய பத்திரிக்கை சாமானியர்கள் நடத்துகின்ற ஒரு பத்திரிகை. அதாவது நடுத்தர வர்கம் நடத்துகின்ற பத்திரிகை.
இந்த பத்திரிகைகளுக்கு இன்று வரை அரசாங்கம் சலுகை, விளம்பரங்களை கொடுப்பதில்லை. இதற்கு என்ன காரணம்? என்றால், ஒரு பக்கம் உண்மையை எழுதுகின்ற பத்திரிகைகள். சமூக அக்கறை உள்ள கருத்துக்கள், செய்திகள் மக்களிடம் கொண்டு செல்வது, இது ஆட்சியாளர்களுக்கு எதிராக தெரிகிறது. அடுத்தது இங்கே சர்குலேஷன் என்ற ஒரு சட்டத்தை மத்திய ,மாநில அரசாங்கம் கொண்டு வந்து பத்தாயிரம் பிரதிகள் அடிப்பவர்களுக்கு தான் நாங்கள் சலுகை, விளம்பரங்கள் கொடுப்போம் என்று சொல்லுகிறார்களே ஒழிய, பத்தாயிரம் அடுத்தாலும் கொடுப்பார்களா?
எவ்வளவு சலுகை, விளம்பரங்கள் கொடுப்பார்கள்? என்பதை அதையும் ஊர்ஜிதம் ஆக சொல்ல மாட்டார்கள். அதுவும் இவர்களுடைய கொள்கை முடிவு. இதுதான் கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு கொடுக்கப்பட்டு, இவர்களுடைய ஊழல்கள் எல்லாம் அங்கே மறைக்கப்பட்டு, அதற்கு ஒரு சைட் சப்போட்டாக அதாவது பக்கபலமாக இருந்து வரும் வேலையை பார்க்கும் பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு தான், இந்த சலுகை, விளம்பரங்கள் என்று மத்திய, மாநில அரசாங்கம் சொல்லாமல், மறைமுகமாக வைத்துள்ள ஒரு சட்டம்.
அதாவது ஊழல்! ஒரு நாட்டில் எந்த அளவுக்கு ஒரு சாமானிய பத்திரிகைகள் கூட வளர முடியவில்லை என்றால், உழைக்கும் மக்களால் ,எவ்வாறு முன்னேற்றம் காண முடியும்? நிச்சயமாக முடியாது. ஏனென்றால், இதை நான் ஏழாண்டுகளுக்கு மேலாக இந்த செய்தியை, செய்தி துறைக்கு எழுதிக் கொண்டிருக்கும் ஒரே பத்திரிக்கை மற்றும் இணையதளம் . இது கடந்த எடப்பாடி ஆட்சியிலிருந்து, செய்தித் துறையில் இயக்குனர்களாக இருந்தவர்கள் வரை, என்னை நன்றாக தெரியும். இந்த பிரச்சனையை நேருக்கு, நேராக சொல்லி இருக்கிறேன்.
இங்கே ஸ்டாலின் வந்து என்ன செய்திருக்கிறார் தெரியுமா? பத்திரிக்கை நல வாரியம் என்று கார்ப்பரேட் மீடியாக்களில் உள்ளவர்களை, அதன் முக்கிய நிர்வாகிகளாக நியமித்து, அவர்கள் முடிவெடுப்பது தான் பத்திரிக்கை சட்டம் ஆகிவிட்டது. எந்த பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்கலாம்? யாருக்கு கொடுப்பது? நீங்கள் யாருக்கு கொடுப்பீர்கள்? உங்களுக்கு வேண்டியவர்களுக்கு கொடுத்துக் கொள்வீர்கள்.
உங்கள் ஆட்சிக்கு ஆதரவாக இருக்கக்கூடியவர்களுக்கு கொடுத்துக் கொள்வீர்கள். அப்படி என்றால், இந்த சமூகத்தின் நன்மைக்காகவும், உண்மையான செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும், ஊழல் நசுக்கி கொண்டிருக்கிறது .இதுதான் ஊழலின் ரகசியம். இந்த ரகசியம் நீதிமன்றத்திற்கும் போக தான் போகிறது.
ஏனென்றால் சட்டம் ஊழலை அங்கீகரிக்கும் பத்திரிகைகளுக்கு அல்ல, ஊழலுக்கு ஒத்து ஊதும் பத்திரிகைகளுக்கு அல்ல. என்னதான் நீங்கள் சர்குலேஷன் என்று சொருகி வைத்தாலும், அந்த சர்குலேஷன் பணம் இருந்தால், எங்களால் அதைவிட அதிகமாக அச்சடிக்க முடியும். அரசாங்க பணத்தில் சர்குலேஷன் காட்டி, பத்திரிக்கை நடத்துவது திறமை அல்ல. எங்களுடைய சொந்த உழைப்பில், பத்திரிக்கை நடத்தி ,மக்கள் கிட்ட உண்மையை சொல்ல வேண்டும் என்ற ஒரு குறிக்கோளோடு தான் இந்த பத்திரிகையை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
அது யார்? யார் ?எப்படி நடத்துகிறார்கள்? என்பது எனக்கு தெரியாது. ஆனால், என்னுடைய பத்திரிக்கை பொருத்த அளவில் அப்படித்தான் நடத்திக் கொண்டிருக்கிறேன். மேலும், இந்த உண்மைகள் தெரியாமல் அரசியலில், அரசியல் கட்சிகளில், தங்களுடைய சுயலாபத்திற்காக, மக்கள் நலனை விட்டு, இவர்களுடைய சொந்த நலனுக்காக, இன்று பல ஆயிரம் கோடி சம்பாதிக்கும் கார்ப்பரேட் அரசியல்வாதியாக, ஊழல்வாதியாக அரசியலில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களெல்லாம் எப்படி? இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் எந்த நோக்கத்திற்காக அரசியல் ?என்பது கூட தெரியாமல், இவர்கள் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சாமானிய ஏழை மக்களின் உழைப்பிற்கு எப்போது ?அரசியல் போய் அவர்களை முன்னேற்றுகிறதோ! அப்போதுதான், அந்த நாட்டின் பொருளாதார முன்னேற்ற வளர்ச்சி .ஆனால், இங்கே ஊரை ஏமாற்றுபவனை கட்சி நிர்வாகிகளாக அறிவித்து ,அவர்களை முன்னேற்றிக்கொண்டு,மேலும் ,இவர்களைத் தொண்டன் என்று அறிவித்து, இந்தத் தொண்டனை இந்த கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் தியாகியாக்கி, உழைப்பவனை பின்னேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் ஊழல் அரசியல்.
இப்போதாவது இந்த செய்தியை படிக்கின்ற ஒவ்வொரு சாமானிய ஏழை, எளிய மக்களுக்கு ஊழலின் அர்த்தம் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால், ஒவ்வொரு அரசியல்வாதியும், கார்ப்பரேட் மீடியாக்களில் அதாவது இந்த தொலைக்காட்சி மைக்கைகளில் பேசி விட்டு, நாட்டையே பிடித்து ஆட்சி அதிகாரம் கைக்கு வந்தவுடன் தலைகால் தெரியாமல் ஆடிக் கொண்டிருக்கும் கூட்டமாக இன்றைய அரசியல் கட்சிகள் இருந்து வருகிறது.
இந்த மக்களுக்கு கட்சி என்றால், ஏதோ பேசுவது தான் என்று தெரியாமல் வாயை பிளந்து கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு அரசியல்வாதியும், உங்கள் பகுதியில் என்ன பேசினார்கள்? எப்படி பேசுகிறார்கள்? என்பது முக்கியமல்ல .என்ன செய்தார்கள்? எப்படி செய்து கொண்டிருக்கிறார்கள்? என்பதை கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும், ஒவ்வொரு கட்சியினர் உடைய தகுதியை நீங்கள் எடை போட்டு பாருங்கள்.
அப்போதுதான் இவர்களுடைய தகுதி என்ன ?என்பது உங்களுக்கு தெரியும். குடிகாரர்களுக்கு எந்த தகுதியும் தெரியாது. குடிப்பதற்கு எவன் பணம் கொடுக்க தகுதி உள்ளதோ, அவன் தான் அவனுக்கு தகுதியானவன். ஆனால், அந்த குடும்பத்தில் உள்ள அவனுடைய மனைவி, குழந்தைகள், பிள்ளைகள், ஆதரவற்றை ,உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாமல், வேலைக்குச் சென்று கஷ்டப்பட்டு, சம்பாதிக்கும் பணத்தில் குடும்பத்தை நடத்தும் போது, அந்த வறுமை! அந்த குடும்பத்தில், எவ்வளவு போராட்டமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்?இவை அத்தனைக்கும் காரணம் இந்த ஊழல்.
எந்த அரசியல் கட்சிக்காக தமிழ்நாட்டில்! இதைப் பற்றி பேசவும், எந்த ஊடகத்தில் இதைப் பற்றி விவாதிக்கவும், அவர்களுக்கு அது அந்த தகுதி இருக்கா? இல்லை. மக்கள் ஏமாளிகளாக இருக்கும் வரை, இவர்கள் அனைவரும் உங்களை ஏறி மிதித்துக் கொண்டிருக்கும் கூட்டம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
எப்போது மக்களுக்காக, மக்கள் நலனுக்காக, நீங்கள் பணம் வாங்காமல் நல்லவர்களையும், நேர்மையானவர்களையும் ,நியாயமானவர்களையும் அரசியலில் பதவிக்கு வர வாக்களிக்கிறீர்களோ, அப்போதுதான் இந்த ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.அப்போதுதான் உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை, இந்த சமூகத்தில் நல்ல ஆட்சியாளர்களால் மட்டுமே அரசியலில் மாற்றத்தை கொடுக்க முடியும். 1965 க்கு முன் உள்ள தமிழ்நாட்டின் அரசியல் !1965 லிருந்து 75 வரை ஒரு அரசியல் ,அதன் பிறகு அரசியலில் நேர்மை, தரம், தகுதி எல்லாமே குறைந்து கொண்டே வந்து விட்டது. இதற்கு காரணம் படிப்பறிவு இல்லாத மக்களாவது நேர்மையானவர்களை, தகுதியானவர்களை தேர்வு செய்தார்கள். பணத்திற்கு தரம் தெரியாது. தகுதி தெரியாது. அது மக்களின் மனசாட்சிக்கு தான் தெரியும்.மேலும்,
தவறு மக்களிடம் உள்ளது .மக்கள் தவறானவர்களை தேர்வு செய்தால், உங்களுக்கு எந்த பயனும் இருக்காது. அவர்கள் தான் உங்கள் காலில் விழுவார்கள் .அவர்கள் தான் தேர்தல் நேரத்தில் உங்களை கெஞ்சுவார்கள். நியாயமானவர்கள் கெஞ்ச மாட்டார்கள். நேர்மையானவர்கள் காலில் விழ மாட்டார்கள். தகுதியானவர்கள் 100 தடவை கையெடுத்து கும்பிட மாட்டார்கள். அவர்கள் ஒரு தடவை தான் கேட்பார்கள். அதுதான் உங்கள் வெற்றி .அவர்கள் ஜெயித்த பிறகு, இந்த மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள்.
இவர்கள் ஜெயித்தவுடன்எங்கே எல்லாம் ஊர் சொத்து? எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கலாம் ?எப்படி ஊழல்வாதிகளோடு, கூட்டணி சேர்த்து கொள்ள அடிக்கலாம்? எப்படி ஊழல் அதிகாரிகளோடு, கூட்டணி வைக்கலாம்? இதை தான் கிராமங்கள் தோறும், நீங்கள் பார்த்த ஒரு அரசியல். நான் பார்த்த அரசியலும், அதுதான்.
இதை இந்த செய்தியின் மூலம் உங்களுக்கு ஞாபகப்படுத்தி, உண்மையை தெளிவாக விளக்கி இருக்கிறேன். இப்போது நீங்கள் உங்களை மட்டுமல்ல, இந்த சமூகத்தையும், கொஞ்சம் நினைத்துப் பார்த்து வாக்களியுங்கள். நிச்சயம் ஊழலற்ற ஆட்சியை, உங்களால் தமிழகத்திற்கு கொடுக்க முடியும்.