தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பலர் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் என் .சதீஷ்குமார்,பி. பாரத சக்கரவர்த்தி, ஆகியோர் அடங்கிய அமர்வு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சீனிவாசன் கடந்த 2024 பிப்ரவரி முதல் 2025 வரை சீம கருவேல மரங்களை அகற்ற 2 கோடியே 37 லட்சத்தை 71 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது இது தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று உள்ளது என தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள் சீமை கருவேல மரங்களை அகற்ற அரசு பணத்தை செலவிடுவது குறித்து வேதனை தெரிவித்த அவர்கள் இந்த கருவேல மரத்தை தனியாருக்கு வழங்கினால் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த ஆண்டு 2022 முதல் சீம கருவேல மரங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் பொது ஏலம் விட உத்தரவிட்டோம் அந்த உத்தரவை இதுவரை அமல்படுத்தவில்லை என நீதிபதிகள் தெரிவித்த குற்றச்சாட்டு.
மேலும், தமிழக முழுதும் கருவேல மரங்களை அகற்ற ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் தமிழக அரசு பொது ஏல அறிவிப்பை வெளியிடாவிட்டால், நீதிமன்றமே ஏலம் குறித்த அறிவிப்பை வெளியிடும் என்றும், மேலும், இந்த உத்தரவுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.தவிர,
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, இப் பிரச்சனை பற்றிய சம்பவம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இது சம்பந்தமாக மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளத்தில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த நிதி இழப்பு குறித்து விடையூர் கிராம பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், லஞ்சத்தால் பொது மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகளுக்கும், அது தோல்வியை தான் அப்போது ஏற்படுத்தியது .ஆனால், இந்த செய்திகள் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டு, எமது வழக்கறிஞர் மூலம் புத்தகத்தை நீதிபதிகளிடம் கொண்டு சேர்க்க சொன்னேன் .அவரும் அதை செய்தார். அதன் பிறகு தான் 2022 ல் நீதிபதிகள், இதுபோன்ற பொது ஏலத்தை கருவேல மரத்தை அகற்ற அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதனால், கிராமங்களில் நடைபெற்று வந்த மிகப்பெரிய ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து உத்தரவிட்டிருப்பது மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில், இணையதளத்தின் சார்பில், எமது மனமார்ந்த பாராட்டுக்கள். மேலும், இந்த கருவேல மரத்தை அகற்றுவதாக ஒரு பக்கம் பொதுமக்களையும், மற்றொரு பக்கம் அரசுக்கு நிதி இழப்பையும், இன்னொரு பக்கம் நீதிமன்றத்தையும் ஏமாற்றி வந்த பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம் முதல் கருவேலமர சார்கோல் ஏற்றுமதி வியாபாரம் நடத்தும் கூட்டம் வரை, இனி ஏமாற்ற முடியாது.மேலும், இதற்கு பக்கபலமாக இருக்கக்கூடிய அரசு ஊழல் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சட்டத்தை ஏமாற்ற முடியாது. இப்படிப்பட்ட ஒரு சம்பவம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் அது !
திருவள்ளூர் மாவட்டம் விடையூர் என்ற சாதாரண குக் கிராமத்திலே 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இரண்டு ஏரிகளில் இருந்த கருவேல மரத்தை வெறும் ₹50,000 க்கு ஏலம் விட்ட நீர் வளத்துறை பொறியாளர் ரமேஷ் மற்றும் பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம் இனிஇப்படிப்பட்ட சட்ட மோசடி வேலைகளை செய்ய முடியாது .அதற்கு நீதிபதிகள் முற்றுப்புள்ளி வைத்து விட்டனர். மேலும், கிராம மக்களுக்கும் இனி இந்த தொல்லை ஒழிந்தது. மேலும்,
பொது காலத்தில் யார் வேண்டுமானாலும், ஏலம் எடுப்பார்கள். யார் அதிக தொகை கொடுக்கிறார்களோ, அவர்களே இனி ஏலத்திற்கு சொந்தக்காரர்.