இதுவே, ஒரு சாதாரண ஒரு பத்திரிக்கையாக இருந்தால், இந்த உயர் அதிகாரிகள் பயப்படுவார்களா? சட்டம் பணக்காரனுக்கு வளைகிறதா? நீதி அரசியல் செல்வாக்கு உள்ளவர்களிடம் தலை குனிகிறதா? மக்களுக்கு பணி செய்ய வேண்டிய அதிகாரிகள் ஒரு பத்திரிகை நடத்தக்கூடிய நிர்வாகியின் மருமகனுக்கு ஏன்? இப்படி எல்லாரும் பயப்படுகிறீர்கள்? அப்படி என்றால் நீங்கள் உங்களுடைய கடமையை சரியாக செய்யவில்லை.
கோர்ட் உத்தரவு மதிக்காமல், தினமலர் பத்திரிகை நிர்வாகியின் மருமகன் சொல்வதை கேட்டு நடப்பீர்களா? மேலும், இந்த கோயில் சொத்து 3. 93 சென்ட் 1999இல் கடையநல்லூர் சோழிய பிராமணர் அறக்கட்டளை சார்பில் தினமலர் பத்திரிகை நிர்வாகியின் மருமகன் எஸ். வைத்தியநாதன் மேனேஜிங் டிரஸ்ட் என்று சொல்லி, பத்திரப்பதிவு செய்து வைத்துக் கொண்டு பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் மூலம் எஃப். ஐ .ஆர் பதிவு செய்துள்ளனர். இதை இந்து சமய அறநிலையத்துறை மறைத்து வைத்துக் கொண்டு, இதே சொத்தை கோயில் சொத்து என்று சொல்லி 2004 இல் வைத்தியநாதன் மூலம் கோயில் டிரஸ்ட் என்று சொல்லி பத்திரப்பதிவு.
இங்கே மேற்படி கோயில் நிர்வாகி எஸ் வைத்தியநாதன் 1999 இல் இருந்து சஸ்பெண்ட் நிலைமையில் உள்ள நபர். ஆனால், 2004 இல் தற்காலிக கோயில் டிரஸ்ட் என்று சொல்லி பத்திரப்பதிவு செய்திருப்பது பத்திரப்பதிவு துறையின் மோசடி வேலை .ஆகக்கூடிய பல்வேறு துறை அதிகாரிகள், இந்த கோயில் சொத்து மோசடி விவகாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமான உண்மை .
மேலும், மேற்படி கோயில் சொத்து உள்ள சர்வே எண்49/1,49/3,52/1,52/3,53/1, படி கோயில் சொத்தில் 2024 வரை டி எஸ் எல் ஆர்( TSLR) காப்பியை போலியாக உருவாக்கியுள்ளனர். இதில் இந்த கோயில் சொத்தில் எப்படி தர்கா பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது? அதற்கு டி .எஸ் .எல் .ஆர் கிடையாது. இப் பிரச்சனையை மூடி மறைக்க மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சராக உள்ள கே. கே. எஸ் .எஸ். ஆர் ராமச்சந்திரன் அதிகாரிகளுக்கு உள்ளடி அழுத்தம் கொடுப்பதாக ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
இவை அனைத்தும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனி கவனத்திற்கு இந்த பிரச்சனை கொண்டு சென்று, ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் ஸ்ரீ அண்ணாமலை நாதர் கோயிலில் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் தமிழ்நாடு ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் வேண்டுகோள்.