ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக போன்ற அரசியல் கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்தது ஜனநாயக தேர்தல் மீது நம்பிக்கை இல்லையா? - தகுதியான வாக்காளர்கள்.

 ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக போன்ற அரசியல் கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்தது ஜனநாயக தேர்தல் மீது நம்பிக்கை இல்லையா? - தகுதியான வாக்காளர்கள்.

நாட்டில் வெற்றியோ, தோல்வியோ தேர்தலில் போட்டி போடுவதற்கு தான் அரசியலில் அரசியல் கட்சிகளுக்கு எலக்சன் கமிஷன் அதாவது தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை நடத்துகிறார்கள் .இதில் அரசியல் கட்சிகள் தங்களுடைய சமூக சேவையை தெரிவிக்கின்ற ஒரு இடம் தான் தேர்தல். அதாவது மக்களின் பரீட்சை என்று சொல்லலாம். மக்கள் இந்த அரசியல் கட்சியினருக்கு வைக்கின்ற பரீட்சை தான் தேர்தல். இது தகுதியான வாக்காளர்களின் நிலைமை.

மேலும், அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக போன்ற பல அரசியல் கட்சிகள் மக்களின் பிரச்சினைகளுக்கு களத்தில் நின்று போராடி இருந்தால், நிச்சயம் தேர்தலில் நின்று இருப்பார்கள் என்பதுதான் உண்மை .இங்கே மக்கள் பிரச்சனைகளை பார்த்து பயந்து ஓடுகிற அரசியல் கட்சியினர் தான் இருக்கிறார்கள் .கூட்டத்தில் பேசிவிட்டு போவது, ஊடக மைக்கில் பேசி விட்டு போவது, இவர்கள் எல்லாம் தேர்தலை புறக்கணித்து தான், தங்களுடைய அரசியல் சாணக்கியத்தனம் வெளிப்படுத்துவார்கள்.

 ஒரு சாமானிய மக்களின் குரலை கேட்டு இறங்கி வந்து பேச வேண்டும். ஆனால், இன்று அப்படி இல்லை .தமிழக முதலமைச்சர் ஸ்டாலினாக இருக்கட்டும், எடப்பாடி பழனிசாமியாக இருக்கட்டும், அண்ணாமலையாக இருக்கட்டும், ராமதாஸ் ஆக இருக்கட்டும், இவர்கள் எல்லாம் அதை போட்டோ ஷூட் போட்டு, அதைக் கூட விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்ட தலைவர்களால் ஊழலைத் தவிர, தமிழ்நாட்டு மக்கள்  வேறு எதுவும் பார்க்க முடியாது. 

உழைப்பவன் விளம்பரத்தை விரும்ப மாட்டான். அதனால் தான், இன்று வரை மோடி இந்த ஊடகத்தில் அடிக்கடி பேசுவதில்லை. போட்டோ ஷூட் போட்டு காட்டுவதில்லை. ஏதோ ஒரு முக்கியமான மேடைப் பேச்சு அல்லது எதுவும் அவர்களாக எடுத்துப் போட்டுக் கொள்வார்கள். ஒவ்வொரு அரசியல் தலைவர்கள், அவர்களுடைய அரசியல் என்ன? என்பதை மக்கள் அதிகாரம் தெரிந்து தான் மக்களுக்கு தெளிவு படுத்திக் கொண்டிருக்கிறது .ஆனால், மக்கள் தான் அதை புரிந்து கொள்ளவில்லை .

மேலும், மக்களுக்காக அரசியல் என்பதை செய்தித் துறை அதிகாரிகளுக்கு கூட புரியவில்லை. சாமானிய மக்களுக்கு எப்படி புரியும்? மேலும், அவர்கள் தேர்தலில் தகுதியற்ற வாக்காளர்களாக இருந்து கொண்டு, இவர்களுக்கு யார்? பணம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு வாக்களிப்பார்கள். அதாவது பரிட்சைக்கு ஒருவன் கஷ்டப்பட்டு படிப்பான். அவன் அதிக மார்க் எடுக்க முடியாமல் தோல்வியடைவான். ஆனால், பரிட்சையில் பிட் அடித்து, காப்பி அடித்து, தில்லு, முல்லு வேலைகளை எல்லாம் செய்து, ஒருவன் வெற்றி பெறுகிறான். அதுபோல்தான் இந்த தேர்தலில் கள்ள ஓட்டு ,பணம் கொடுத்து, பொய் வாக்குறுதிகளை கொடுத்து, வாக்காளர்களை ஏமாற்றி வெற்றி பெறுவதும், இதே வகை தான்.மேலும், 

இங்கே அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்தது இந்த தேர்தல் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லையா? அதேபோல் பாஜக, தேமுதிக, பாமக போன்ற அரசியல் கட்சிகள் தேர்தலை புறக்கணித்தது, ஜனநாயகத் தேர்தல் மீது இவர்களுக்கு நம்பிக்கை இல்லையா? மக்களுக்கு அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை வர வேண்டும். யார்? இறங்கி இன்று மக்கள் பணியாற்றக்கூடிய அரசியல் கட்சி எது? என்று தேட வேண்டி இருக்கிறது. ஆனால், கார்ப்பரேட் தொலைக்காட்சி மைக்கைகளில் பேசி விட்டு போவது அரசியல் அல்ல .இது அரசியல் தெரியாதவர்களை ஏமாற்றும் வேலை. தெரிந்தவர்களிடம் ஏமாற்ற முடியாது. 

மேலும், இன்றைய அரசியல் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் மக்கள் அனுபவிக்கும் ஒரே கொடுமை என்றால், அது ஏமாற்று வேலை தான். ஒரு பக்கம் இன்டர்நெட் மோசடி என்று காவல்துறை எச்சரிக்கை செய்கிறது. இன்னொரு பக்கம் அரசியல் கட்சியின் மோசடி என்று எங்களைப் போன்ற சமூக நலன் ஊடகங்கள் மக்களுக்கு எச்சரிக்கை செய்கிறது. எனவே,

 மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் தான் ,அதுஅரசியலாக இருக்கட்டும் அல்லது சமூக பிரச்சனையாக இருக்கட்டும், இன்று ஒருவரை ஏமாற்றி தான் இன்னொருவர் மேலே வருவேன் என்று நினைப்பது தவறான செயல். இதற்கு காரணம் நாட்டில்! அரசியல் கட்சிகள் பெருகிவிட்டது தான் முக்கிய காரணம். மக்கள் இந்த அரசியல் கட்சிகளால் பிளவுபடுத்தப்படுகிறார்கள். இவர்களுடைய பேச்சை நம்பி மக்கள் ஏமாறுகிறார்கள் .ஒரு பக்கம் ஜாதி ரீதியாகவும், மற்றொரு பக்கம் மதரீதியாகவும் இந்த ஏமாற்றங்கள் ,இந்த மக்களுக்கு தொடர்கதையாகிறது.


அதனால், இன்றைய போலியான அரசியலை நம்பி மக்கள் ஏமாறாமல், உண்மையாக மக்களுக்காக உழைக்கக்கூடிய அரசியல் கட்சி எது? என்று முதலில் மக்கள் அதைத் தெரிந்து வாழ வேண்டும். தமிழ்நாட்டில் அப்படி ஒரு கட்சி எங்கே? என்று நானே தேடிக் கொண்டிருக்கிறேன். கட்சி தான் இல்லை என்றாலும், அப்படிப்பட்ட ஒரு அரசியல்வாதியாவது இருக்கிறார்களா? என்று தேடுகிறேன். இன்னும் கிடைக்கவில்லை. அதனால், மக்கள் அரசியல் விழிப்புணர்வு அவசியம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
Popular posts
சிவவாக்கிய சித்தரின்! ஆன்மீக கொள்கை, செயல்பாடுகள் பற்றிய உண்மைகள் .
படம்
Tamil Nadu Government Journalists Identity Card? Or circulation ID card of magazines? Can you give a proper explanation for this? - Press Officers.
படம்
பறையர் இன மக்களுக்கு தங்கள் வரலாறு தெரியாமல், ஆளுக்கு ஒரு கருத்து பேசுகிறார்கள் . இதுபற்றிய கடந்தகால வரலாற்று உண்மைகள் என்ன?
படம்
அருள்வெளி சித்தர் பாபாவின் 32 ஆம் ஆண்டு மகா குருபூஜை சிறப்பாக நடைபெற்றது
படம்
மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறை ! பொதுமக்களுக்கு சேவை செய்ய தானே தவிர, தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தக் கூடாது- சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு.
படம்