இதுதான் திமுக அரசின் கார்ப்பரேட் மீடியாவின் ஷோ காட்டும் அரசியலா ? இவர்கள் மீடியாக்களா? இல்லை அவர்களுடைய ஜால்ராகளா? எதற்கு நான்காவது தூண்? என்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள்? இதுல வேற பெரிய பத்திரிக்கை, பெரிய தொலைக்காட்சி ,அதற்கு தகுதியே ஒன்றுக்கு கூட கிடையாது.
மக்களிடம் உண்மையை சொல்ல வேண்டிய பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் மக்களை ஏமாற்றும் அரசியல் நடத்தும் ஆட்சியாளர்களுக்கு ஜால்ராவாக இருந்தால் அதையெல்லாம் ஊடகங்களாக மக்களை எடுத்துக் கொள்ளக் கூடாது. மக்களிடம் உண்மை வெளிப்படுத்துவதற்கு தான் ஊடகங்கள். உண்மையை மறைப்பதற்கும், சூழ்ச்சி அரசியலை வெளிப்படுத்துவதற்கு தகுதி இல்லாத பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மக்களுக்கு தேவையில்லை இதை பலமுறை மக்கள் அதிகாரம் இணையதளம் மற்றும் பத்திரிகைகளில் செய்திகளாக வெளியிட்டுள்ளது.மேலும்,
ஒரு நூறு ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொடுத்து ,உங்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு வர்ணனை ஜால வித்தைகளை எல்லாம் திமுக பேசத் தெரிந்த கலையை முட்டாள்களிடம் வைத்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மக்களை நூறு ரூபாய்க்கு கூட கையேந்து வைக்கின்ற ஒரு ஆட்சி திமுக ஆட்சியாக தான் உள்ளது. தகுதியான மக்கள், மனசாட்சி உள்ள மக்களாக இருந்தால் இந்தப் பொங்கல் தொகுப்பை வாங்கக்கூடாது. புறக்கணிக்க வேண்டும்.
இதற்கு தான் அரசு அடையாள அட்டை ,பஸ் பாஸ், விளம்பரங்கள், வாங்குவதற்காக இன்றைய கார்ப்பரேட் கம்பெனி பத்திரிக்கை தொலைக்காட்சிகள் மக்களை முட்டாளாக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறது . எந்த ஒரு பத்திரிக்கையும், அரசு செய்தியை அப்படியே போட வேண்டும் என்ற ஒரு விதியும் கிடையாது. அதனுடைய நல்லது, கெட்டது எல்லாவற்றையும் சொல்லக்கூடிய நடுநிலையான பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் நாட்டில் இல்லை என்பதை தான் மக்களிடம் தெரிவிக்கிறேன்.
மக்களுக்கு சட்ட ஒழுங்கு பாதுகாப்பு தர வேண்டும், போதை பொருளை ஒழித்து, மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும். நாட்டில் மக்களுக்கு ஊழல் அற்ற வெளிப்படுத்தன்மையான ஆட்சியை தர வேண்டும். இலவசம் மக்களுக்கு தேவையில்லை. ஓட்டுக்கு பணம் தேவையில்லை. நாட்டில் தேர்தல் வியாபாரத்தை தடுக்க வேண்டும் என்றால் தேர்தல் ஆணையம் பணம் கொடுப்பவர்களுக்கு குறைந்தபட்சம் 10 லட்சம் அபராதம், பத்தாண்டு ஜெயில் தண்டனை கொடுக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட வேட்பாளரை பத்து ஆண்டுகள் நிற்க முடியாத நிலைமையும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்ய முடியாத தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்ற கூடாது. அதற்கான நிதியாகாரத்தை தேர்தல் ஆணையம் அப்போதே அவர்களிடம் கேட்க வேண்டும். அரசியலிலோ ,ஆட்சியிலோ ஊழல் செய்து சொத்து சம்பாதித்தால், அதை உடனடியாக அரசாங்க கணக்கில் வரவு வைக்க வேண்டும். காலத்திற்கு ஏற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்.
இப்படி எல்லாம் சட்டங்கள் கொண்டு வந்தால் தான், நாட்டில் நல்லாட்சியும் நேர்மையான ஆட்சியும் மக்களுக்கு கொடுக்க முடியும். மேலும், செய்தி துறையின் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். அதாவது நடுநிலை ஆன, தரமான, உண்மையான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளுக்கு மட்டுமே சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட வேண்டும். இங்கே கட்சி பத்திரிக்கை, கட்சி ஊடகங்கள் ,காட்சி ஊடகங்கள்,வியாபார ஊடகங்கள், சலுகை, விளம்பரங்களை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதுவும் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்கும் வேலை . இதையெல்லாம் தவிர்த்தால் தான் நாட்டில் ஊழலை ஒழிக்க முடியும். ஊழல்வாதிகளை அரசியல் கட்சியில் இருந்து அகற்ற முடியும்.
ஊழல் ஆட்சியை நடத்திக் கொண்டு, ஊழல்வாதிகளாக இருந்துக் கொண்டு ஊழலை ஒழிப்போம் என்று வாயிலே பேசிக்கொண்டு ,பத்திரிகை, தொலைக்காட்சிகளில் காட்டிக் கொண்டு, மக்களை ஏமாற்றும் அரசியலை 50 ஆண்டு காலமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களும் வருங்கால இளைய தலைமுறைகளும், இந்த அரசியலை புரிந்து கொள்ளுங்கள்.
அப்போதுதான் மக்களுக்கான ஆட்சி !அதுதான் மக்களாட்சி.ஆசிரியர் .