திருச்செந்தூர் முருகன் கோயில் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு. அது மட்டுமல்ல, இது ஒரு குருவின் பரிகார ஸ்தலமாகவும் திருச்செந்தூர் விளங்குகிறது.
இக்கோயிலுக்கு இந்தியா முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுதும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அப்படிப்பட்ட முருகப்பெருமானின் சிறப்பு வாய்ந்த கோயில்களில் முக்கியத்துவம் பெற்றது திருச்செந்தூர் முருகன்.மேலும் இக்கோயில் ஆரம்பத்தில் கடலுக்கும்,கோயிலுக்கும் எவ்வளவு தூரம் இருந்தது? கடல் எவ்வளவு தூரம் இருக்கிறது?தற்போது கோயில் வரை நெருங்கி உள்ளதற்கு மீன்பிடிக்க தூண்டில் பாறை இடிக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்பு இன்று கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்க முடியாத சூழல் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
ஒரு பக்கம் கோயிலுக்கும் ஆபத்தான சூழ்நிலை .மற்றொரு பக்கம் பக்தர்களுக்கும் அசவௌகரிங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை பக்தர்கள் தான் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தான் என்று பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதை பற்றி திமுக அரசோ அல்லது கோயில் நிர்வாகமோ அல்லது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளோ இன்னும் எந்த நடவடிக்கையும் இது பற்றி எடுக்கவில்லை என்பதுதான் முருக பக்தர்களின் வேதனை.
மேலும், பிஜேபி அரசியல் கட்சியினரிடம் பக்தர்கள் புகார் தெரிவித்தும் ,எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள பிஜேபியினர் மோடி மேலே பாரத்தை போட்டுவிட்டு நின்று கொண்டிருப்பார்கள். மோடி பார்த்துக் கொள்வார். மோடி செய்து விடுவார். இவர்கள் எதையும் செய்ய மாட்டார்கள். ஆனால், தமிழ்நாட்டில் தாமரை மலரச் செய்வோம் என்று கார்ப்பரேட் மீடியா பேட்டியிலே செய்து விடுவார்கள்.மேலும்,
இதைப் பற்றி தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.