கிராம சபை கூட்டம் என்பது 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களுக்காக போடப்பட்ட சட்டம் . இந்த 50 ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கை மனநிலை கலாச்சாரம் கல்வி இவை அனைத்துமே மக்களுடைய வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது .
அந்த மாற்றம்தான் இணையதளம். இந்த இணையதளத்தை பற்றி மத்திய அரசுக்கு நன்கு தெரியும். அப்படி இருந்தும் பெயருக்கு கிராமசபை என்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த கிராம சபை கூட்டம் ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு கிராம சபையில் இடம் பெற வேண்டும் .அப்படி எந்த ஒரு கிராம சபை கூட்டமும் கிராமத்தில் நடைபெறுவதில்லை. கணக்குக்கு 10 பேர், 20 பேர், 50 பேர் ,அதிகபட்சம் 100 பேர் அதற்கு மேல் வருவதில்லை .
மேலும், இதற்காக கிராம பஞ்சாயத்தில் எழுதப்படும் கணக்கு கிராமசபை கூட்டம் நடத்தாமலே சுமார் 10,000 வரை கணக்கு எழுதி காட்டுகிறார்கள். அதுவும் இந்த ஆடிட் கணக்கில் டிக் அடித்து சரி செய்து விடுவார்கள் ஆடிட்டர்கள். அதாவது இந்த சிஸ்டத்தை மாற்றாமல், இந்தியா முழுவதும் உள்ள கிராமங்களின் வளர்ச்சி நிச்சயம் மாற்ற முடியாது .நீங்கள் அனுப்புகின்ற பணம், திட்டங்கள், எல்லாமே மக்களுக்கு பயன்களாக போய் சேரவில்லை. அது இந்த பஞ்சாயத்து நிர்வாகிகள் பங்கு போட்டுக் கொள்கிறார்கள்.
மேலும், இந்த கிராம சபை கூட்டத்திற்கு ஏன் மக்கள் வரவில்லை? ஏன் அந்தக் கூட்டத்திற்கு மக்கள் வருவதற்கு தயங்குகிறார்கள்? இது பற்றி எந்த பத்திரிக்கையோ, எந்த தொலைக்காட்சியோ, இதுவரை இந்த செய்திகளை வெளியிட்டு இருக்காது. ஏனென்றால், 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களுக்கு ஏமாற்றத் தெரியாது .ரவுடிசம் செய்யத் தெரியாது.இவர்கள் இதையெல்லாம் கருவிலே தெரிந்து கொண்டுதான் வந்திருக்கிறார்கள்.
ஆனால் அந்த காலத்தில் கிராம தலைவராக வந்தவர்கள் ,தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணி அதை கௌரவமாக செய்ய வேண்டும் என்ற ஒரு நோக்கம் மட்டும் தான் இருக்குமே ஒழிய, அதாவது அவர்களிடத்தில் பொதுநலம் மட்டும்தான் இருந்தது. சுயநலம் துளி கூட கிடையாது .இப்போது இந்த பஞ்சாயத்து நிர்வாகத்தில் இருந்து எத்தனை கோடி எடுக்கலாம்? என்ற கணக்கு போட்டு தான் இன்றைய பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு மெம்பர்கள் வருகிறார்கள் .அதற்காகத்தான் தங்க முலாம் பூசிய மூக்குத்தி கொடுத்து, அதில் கூட கிராம மக்களை ஏமாற்றுகிறார்கள். இல்லையென்றால், ஆயிரம், 500 கொடுத்து, ஏமாற்றி வந்துவிட்டு ,இவர்கள் எப்படி கிராமத்திற்கு நல்லது செய்வார்கள்? ஒரு காலும் செய்ய மாட்டார்கள்.
இந்த மக்கள் அந்த தங்க மூலம் பேசிய மூக்குத்திகளையும், ஆயிரம், 500 கொடுப்பதை வாங்கிக் கொண்டு, நல்லவர்களாக 100 தடவை கையெடுத்து கும்பிட்டு, நடையாய் நடந்து, காலில் விழாத குறையாக ஓட்டு கேட்டு, ஏமாற்றுவது தான் இன்றைய பஞ்சாயத்து நிர்வாகத்தினரின் திறமை . இந்த திறமையை பார்த்து,ஓட்டு போட்ட மக்கள் கிராமத்தில் பிறகு, இவ்வளவு பஞ்சாயத்தில் சாப்பிட்டு விட்டார்கள். இவ்வளவு கோடி சாப்பிட்டான், அப்படி சாப்பிட்டான், எப்படி சாப்பிட்டான் என்று பின்னாடி தான் புலம்புவார்கள்.அவர்கள் அதை திறமை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை கூட நேரடியாக கேட்க தைரியம் இருக்காது. இந்த மக்களுக்கு!
ஏனென்றால் எல்லாமே ரவுடி கூட்டம் .பின்புலத்தில் அவர்கள் கட்சி என்று சொல்லிக்கொண்டு மிரட்டிக் கொண்டு இருப்பார்கள் .இது தவிர, இவர்கள் பின்னால் சுமார் ஒரு 50 குடிகாரர்களை தினமும் குடிப்பதற்கு பணம் கொடுத்து வைத்திருப்பார்கள். இவர்களெல்லாம் பக்கபலமாக பேசுவதற்கு ஆளை வைத்துக் கொண்டு, அடாவடி வேலைகளை செய்து கொண்டிருப்பார்கள் .இந்த கூட்டத்தை வைத்து கிராமசபை கூட்டம் நடத்துவார்கள். அங்கே எவனாவது நியாயம் பேசி அல்லது உண்மையைப் பேசி கேள்வி கேட்டால், இந்த குடிகார கூட்டம் சண்டைக்கு வரும். இதுதான் கிராம சபை கூட்டத்தில் ஏற்படுகின்ற சண்டை .
இதனால், பல கிராமங்களில் கேள்வியை கேட்கத் தெரிந்தவர்கள், சமூக நலனில் அக்கறை உள்ளவர்கள், அந்த கிராம நலனில் அக்கறை உள்ளவர்கள், அந்தப் பக்கமே போவதில்லை. இப்போதாவது கிராமசபை கூட்டம் எதற்காக மக்கள் வரவில்லை? என்பது தமிழக கிராம மக்களுக்கு புரிந்து இருக்குமா ?அதனால்தான், ஒட்டுமொத்த இந்தியாவின் கிராமங்களின் செயல்பாடுகள், திட்டங்கள், வரவு செலவு கணக்குகள், கிராமத்தில் எது நடந்தாலும், அதாவது மரம் ஏலம் விட்டாலும், ஆற்று மணல் ஏலம் விட்டாலும், ஏரி மண் ஏலம் விட்டாலும், எல்லாமே ஆன்லைனில் கொண்டு வாருங்கள் .
மேலும், ஒவ்வொரு நாளும் கிராமத்தின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் எல்லாமே ஆன்லைனில் ஏற்றப்பட வேண்டும் . இது அந்த கிராமத்தில் உள்ள பொது மக்களுக்கு கிராம பஞ்சாயத்தின் இணையதளத்தை தட்டிப் பார்த்தால் எல்லாமே வெளிப்படையாக இருக்க வேண்டும் .அப்போதுதான் கிராமத்தின் வளர்ச்சி அப்போதுதான், உண்மையான கிராம நிர்வாகம் இருக்கும். பெயருக்கு கிராம சபை கூட்டம் நடத்தி விட்டு போவதில் எந்த பயனும் இல்லை . எனவே ,உடனடியாக ஆன்லைன் நிர்வாகத்தை மத்திய அரசு கொண்டுவர தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளின் கோரிக்கை . மத்திய அரசு இதை நிறைவேற்றுமா ?