மேலும், இன்று காலாவதியான போலி சட்டங்களால், நாட்டில் எவ்வளவு குழப்பங்கள்? எவ்வளவு ஊழல்கள்? எவ்வளவு மக்களின் வாழ்க்கை போராட்டங்கள் தொடர்கிறது? என்பது இந்த போலி சட்டங்களால் தெரியுமா? தெரிந்து கொள்வோம் . ஊழல்வாதிகள் சொத்து கணக், ஊழல்வாதிகளின் பினாமி சொத்து கணக்கு, ஊழல்வாதிகளின் கருப்பு பணம், அரசியல் கட்சியினரின் பொய்ப் பிரச்சாரங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் போலி வேஷங்கள், இதை மக்களிடம் வியாபாரம் ஆக்கும், கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகளின் சர்குலேஷன் சட்டம், இவை அத்தனையும் காலாவதியான போலி சட்டங்களோடு! ஒன்றோடு ,ஒன்று இணைந்து நாட்டில் வறுமையை, பொருளாதார தடைகளை, ஜாதி மோதல்களை, ஜாதி அரசியல் கட்சிகள் எல்லாம் இந்த போலி அரசியல் பிம்பத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.
இப்போது ஊரை ஏமாற்றுவது, சமூகத்தை ஏமாற்றுவது,அரசியலமைப்பு சட்டத்தை ஏமாற்றுவது, அரசியல் கட்சி என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டு, சட்டத்திற்கு புறம்பான வேலைகளில் ஈடுபட்டு பல கோடிகளை சம்பாதிப்பது, அரசியல் கட்சி தலைவர்கள் பத்து தலைமுறைக்கு மேல் சொத்துக்களை வாங்கி குவிப்பது, வெளிநாடுகளில் முதலீடு செய்வது, பதவி, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது, மனசாட்சி இல்லாமல் பேசுவது, வாழ்வது, எதுவும் அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் மக்களிடம் 99 சதவீதம் இல்லை .ஒருவேளைஒரு சதவீதம் இருந்திருக்கலாம், அந்த ஒரு சதவீத மக்களுக்கு எதிராக அம்பேத்கர் போன்ற போராடி இருக்கலாம். ஆனால் இப்போது அதற்கு நேர் எதிர் மாற்றமாக தான் மக்கள் இருக்கிறார்கள் .
அப்படி என்றால்! சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப, மக்களின் மனநிலைக்கு ஏற்ப, மாற்றித்தானே ஆக வேண்டும். ஏன்? பத்திரிகைகளில் கூட இந்த சட்டங்கள் மற்றப் பட வேண்டியது அவசியம் .இவை அனைத்தும் ஊழல்வாதிகளுக்கு, போலி அரசியல்வாதிகளுக்கு, ஊழல் அரசியல் கட்சிகளுக்கு, சாதகமாக இந்த பத்திரிக்கை. தொலைக்காட்சிகள் கூலிக்கு மாரடைக்கும் பத்திரிகை கூட்டங்கள், சொந்த நலனுக்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் உழைப்பவன், முன்னேற முடியவில்லை. ஊரை ஏமாற்றுபவர்கள் திறமைசாலி என்று, அரசியலில் ஊழல் செய்து முன்னேறுகிறார்கள்.
இதற்கெல்லாம் மோடி எங்கே இந்த சட்டங்களை மாற்றி விடுவாரோ? என்ற பயத்தில் தான், இன்றைய எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அச்சத்தில் இவர்கள் என்னமோ அரசியலமைப்பு சட்டங்களை உருவாக்கியவர்கள் போல பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், இப்போது ஜாதி !அதிலும் பறையர் சமூகம், ஜாதி கட்சி தலைவர்கள் என்ற போர்வையில், இவர்கள் மற்ற சமூகங்களுக்கு எதிராக பேசுவது, சட்டத்தை ஏமாற்றி முன்னுக்கு வர அம்பேத்கர் இந்த சட்டங்களை உருவாக்கவில்லை. அதேபோல், அம்பேத்கர் பி சி ஆர் சட்டத்தை தவறாக பயன்படுத்த அவர் கொண்டு வரவில்லை. அதை பெரும்பாலும் அரசியல் கட்சியினரும், ஊழல்வாதிகளுமே இந்த சட்டத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக அம்பேத்கர் இந்த சட்டத்தை கொண்டு வந்தாரா?
இப்படி பல சட்டங்கள் நாட்டில் காலாவதியாகி, மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சட்டங்களுக்கு எல்லாம் காலத்திற்கு ஏற்றவாறு, சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். அது அமைக்காத வரை, நாட்டில் ஊழலும் ஒழிக்க முடியாது. வறுமையும் ஒழிக்க முடியாது .உழைப்பவர்கள் முன்னேற்றம் கேள்விக்குறியாகி, ஊரை ஏமாற்றும் அரசியல் கட்சியினரின் முன்னேற்றம் மட்டும் தான் நாட்டில் இருக்குமே தவிர, உழைக்கும் வர்க்கம் எல்லா ஜாதிகளிலும், எல்லா மதங்களிலும் இன்று முன்னேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.
இதற்கு இந்த காலாவதியான சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும் .மோடி ஒருவரால் தான் இந்த சட்டத்தை களை எடுக்க முடியும் .அதை தான் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகளின் தலைவர்கள் கதறல் . மக்களுக்கு இந்த உண்மையை சொல்லக்கூடிய பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் கூட இல்லை. என்னுடைய பேஸ்புக்கில் சிறிய பத்திரிகைகள் முதல் பெரிய பத்திரிகைகள் வரை இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். இருந்து என்ன பயன்? மக்களிடம் உண்மையை கொண்டு சேர்க்கவில்லை. உண்மையை சேர்க்கும் சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு! பத்திரிகையாளர்களுக்கு! அதற்குரிய அங்கீகாரம், மதிப்பு, மரியாதை மத்திய, மாநில அரசுகள் இன்னும் கொடுக்காமல், போலி பத்திரிகைகளுக்கும், வியாபார பத்திரிகைகளுக்கும், முக்கியத்துவம் அளிக்கிறார்கள். இதுதான் நாட்டில் காலாவதியான சட்டங்களின் சிறப்பு அம்சம்.
இந்த காலாவதியான சட்டங்களின் பின்விளைவு என்ன? ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் கேள்விக்குறியாகிறது. சமூகத்தில் அவர்களால் சட்டப் போராட்டம், அதிகார வர்க்கத்தை எதிர்த்து தொடர முடியவில்லை. தொடர்ந்து அரசியல்வாதிகளின் பொய் பிரச்சாரங்களால் அரசியலில் அவர்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் .ஒவ்வொரு ஜாதியிலும், ஏமாற்று கூட்டம் ஜாதிகளை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.இத்தனைக்கும் முக்கிய காரணம்! அம்பேத்கரின் காலாவதியான சட்டங்கள்,
இந்த உண்மையை மனசாட்சி உள்ள மக்கள் புரிந்திருப்பார்கள். மனசாட்சி அற்றவர்கள் மற்றும் சுயநல கொண்ட அரசியல் கட்சியினர், மனதில் அச்சத்துடன் புலம்புவார்கள் .அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. இருப்பினும், மக்களுக்கு உண்மையை உணர்த்துவது தான் மக்கள் அதிகாரத்தின் முக்கிய நோக்கம். இதை படித்து புரிந்து கொள்பவர்கள் அவரவர் திறமை .