எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது அரசு ஊழியர்களை சந்தித்த ஸ்டாலின்! ஆளுங்கட்சி முதல்வரான பிறகு, அரசு ஊழியர் சங்கங்களை சந்திப்பதில்லை. இதனால், அரசு ஊழியர்களும், அரசு ஊழியர் சங்கங்களும் வெறுப்பில் உள்ளனர். மேலும், தேர்தல் வாக்குறுதியில் செய்ய முடியாத ஒன்றை அறிவித்துவிட்டு, அல்லல் படுவது அல்லது அதற்கு ஏற்றார் போல் ஒரு பதிலை சொல்வது திமுகவிற்கு கைவந்த கலை.
இவர்கள் அரசு ஊழியர்களுக்கு ஓல்ட் பென்ஷன் ஸ்கீம் கொண்டு வருவோம் என அறிவித்து விட்டார்கள் .இப்போது அதைப்பற்றி பேசுவதே இல்லை .அரசு ஊழியர் சங்கங்கள் பேசினாலும், அதற்கு பதிலும் கொடுப்பதில்லை. இல்லையென்றால், நிதி பற்றாக்குறை என்று ஒரே வார்த்தையில் சொல்லி விடுகிறார்கள். இப்படி சொல்வது சுலபம் செய்வது கடினம் என்பதை உணர்ந்து சொல்ல வேண்டும். அது திமுகவினர் இடையே கிடையாது. ஆட்சியினரிடையேயும் கிடையாது. சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. இதுதான் திமுகவின் சரித்திரம்.
எப்படியோ அந்த காலத்தில் கருணாநிதி விவசாய கடன் தள்ளுபடி செய்தார். அதை விவசாயிகளுக்கு முக்கியத்துவமாக இருந்தது. அது சொன்னதை செய்தார். இங்கே அரசு ஊழியர்கள் சொன்னதை செய்யவில்லை என்று இவரை எதிர்க்கட்சி தலைவராக்குவோம் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள் .மேலும், பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைப்போம் என்று சொன்னார்கள்.
அதனால் தான், இதற்கு கோடிக்கணக்கில் சலுகை, விளம்பரங்கள் என்கிறார்கள். அப்படி என்றால் மக்களுக்கான பத்திரிகைகள் எத்தனை? இந்த கார்ப்பரேட் பத்திரிகைகளில் இருக்கிறது என்பதை செய்தித் துறை நிரூபிக்குமா? மக்களின் வரிப்பணத்தில் கொடுக்கக்கூடிய இது மக்களுக்காக ஒரு பத்திரிக்கை கூட இல்லை என்றால், எதற்காக ?வரி பணத்தில் எத்தனை கோடி செலவு செய்கிறீர்கள்?
இதற்கும் முதல்வர் ஸ்டாலின் நிச்சயம் இந்த பத்திரிகைகளின் எதிர்ப்பிற்கு நிச்சயம் தேர்தல் நேரத்தில் திமுகவிற்கு எதிராக நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது அனைத்து சமூக நலன் பத்திரிகையாளர்கள் நிலைப்பாடாக இருக்க வேண்டும் என்று சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது .