நாட்டில் மத்திய மாநில செய்தித் துறைக்கு பத்திரிகைகளின் தரத்தை நிர்ணயிக்க வேண்டியது காலம் வந்து விட்டதா ? பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா பத்திரிக்கை துறையை வரைமுறைப்படுத்துமா ?

 

நாட்டில் RNI வாங்கியவர்கள் அத்தனை பேரும் தங்களை பத்திரிக்கை என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இதில் எத்தனை பத்திரிக்கை நடுநிலையானது? எத்தனை பத்திரிக்கை அந்த நடுநிலையான பத்திரிக்கைக்கு தகுதியானது? இதில் எத்தனை சமூக நலன் சார்ந்தது? இதில் எத்தனை அரசியல் கட்சி சார்ந்தது? இதில் எத்தனை போலியானது ?இதில் எத்தனை வியாபார நோக்கம் கொண்டது? இதில் எத்தனை பத்திரிக்கை செய்திகளுக்கு அர்த்தமற்றது ?இவ்வளவு பத்திரிகைகள் நாட்டில் வெளிவந்து கொண்டிருக்கிறது. இவை அத்தனையும் தானும் பத்திரிகை என்றுதான் பேசிக் கொண்டிருக்கிறது .

ஒரு பி ஆர் ஓ சொல்கிறார், பத்திரிகைகள் அதிகரித்து விட்டது. ஒரு மாவட்டத்திற்கு சுமார் 400 பத்திரிகைகள் இருக்கிறது .அதில், 200 பத்திரிகைகள் மாதம் ,வார இதழ், தினசரி என்று வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதில் ஒரு பத்திரிகை கூட ஆன்லைனில் அதாவது இணையதளத்தில் பார்வையாளர்கள் அதிகம் இல்லை .ஆனால், அப்படிப்பட்ட பத்திரிகைகள் கூட இன்று சலுகை, விளம்பரங்களை அரசாங்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதாவது செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி ஒருவர் சொல்கிறார். பி ஆர் ஓ ஆபிசுக்கு தினசரி பத்திரிகை கொடுக்கிறார்கள் .அரசு செய்தி போடுகிறார்கள். அவர்கள் பஸ் பாஸ் வாங்குகிறார்கள். விளம்பரங்கள் வாங்குகிறார்கள் என்றார்.

நான் அவரிடம் கேட்டேன். பத்திரிக்கை மக்களுக்கா? அல்லது அரசுக்கா? யாருக்கு பத்திரிக்கை நடத்த வேண்டும்? அவரால் பதில் சொல்ல முடியவில்லை . மேலும், நான் சொன்னேன். இந்த தினசரி பத்திரிகைகள் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 10,000 பிரதிகளை அச்சடிக்க வேண்டும். அதில் எவ்வளவு விற்பனை ?எவ்வளவு ரிட்டன்ஸ்?இது பற்றி அந்தந்த பத்திரிகையின் ஏஜென்ட்கள் ,இவர்களுடைய வங்கி கணக்கிற்கு தினசரி எத்தனை ஆயிரம் ரூபாய் அனுப்பினார்கள்? அந்த கணக்கு எத்தனை பத்திரிகைகள் உண்மையாக கணக்கு காட்டுகிறார்கள்? இது ஒரு புறம் என்றால்! 

அடுத்தது சர்குலேஷன் சட்டத்தில் ஒவ்வொரு பத்திரிக்கையும் தினசரி பத்தாயிரம் பிரதிகள் அச்சடிக்க வேண்டும். இதில் எத்தனை பத்திரிக்கை பத்தாயிரம் காப்பி அடிக்கிறது? இதுதான் இங்கு முக்கியமாக பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா பார்க்க வேண்டும் . அதாவது, ஒரு லட்சம் பத்திரிக்கையில் பத்து பத்திரிக்கை கூட இந்த பத்தாயிரம் பிரிதிகளை அடிக்காது . ஆனால், ஆடிட் அக்கவுண்ட்ஸ் காட்டும்போது, எல்லோரும் தினசரி பத்தாயிரம் பிரதிகள் அடிப்பதாக கணக்கு காட்டி, அதில் ரிட்டன்ஸ், வரவு, செலவு எல்லாவற்றையும் கணக்கு பேப்பரில் காட்டி விடுகிறார்கள். ஆனால் நிஜத்தில் அங்கு எதுவுமே இருக்காது இதுதான் தற்போதைய தினசரி பத்திரிகைகளின் போலி அரசியல் பத்திரிகை வியாபாரம்.

 இந்த பத்திரிகை செய்திகளை பார்த்து மக்களுக்கு தேவையானது என்று ஒரு செய்தி கூட அதுல இருக்காது .பெரும்பாலும் டிவியில் வெளிவந்த செய்திகள், இணையதளத்தில் காப்பியடித்த செய்திகள், வேறு சில பத்திரிகைகளில் காப்பியடித்த செய்திகள், இதுதான் அதில் இருக்கும். புதியதாக வேறொன்றும் இருக்காது. இது பற்றி ஒவ்வொரு பத்திரிக்கையும், அதன் இணையதளத்தையும் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா, ஆய்வு செய்து பார்க்க வேண்டும். அப்போதுதான் இந்த பத்திரிகைகளின் தரம், பகுதி என்ன? என்று தெரிய வரும் . 

இது தவிர, இதில் எத்தனை போலி செய்திகள், பொய்யான செய்திகள், உண்மை செய்திகள், தரமான செய்திகள், மக்களுக்கு தேவையான செய்திகள், சமூக நலன் சார்ந்த செய்திகள், அரசியல் கட்சி சார்ந்த செய்திகள், அரசுக்கு ஜால்ராவான செய்திகள், இப்படி பல பத்திரிகைகள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. அரசை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. மக்களின் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறது. இதனால்தான் நாட்டில் ஊழல்கள், குற்றவாளிகள், ஒரு பக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளனர். பத்திரிகையின் நிலைமை எப்படியோ, அப்படித்தான் இந்த தொலைக்காட்சிகள் நிலைமையும் இப்படித்தான் இருக்கிறது.

இதைவிட கொடுமை, நான் பெரிய பத்திரிக்கை, அவன் சிறிய பத்திரிக்கை இந்த கூத்து செய்தியாளர்கள் மத்தியில் ஒரு பக்கம், நான் இந்த டிவி செய்தியாளர், அந்த டிவி செய்தியாளர், நான் தினமலர் செய்தியாளர், தினத்தந்தி செய்தியாளர், தினகரன் செய்தியாளர் இப்படி இந்த பத்திரிகையின் லேபில்கள் ஒரு பக்கம் வைத்துக் கொண்டு ,இவர்கள் அடிக்கின்ற கூத்து செய்தித்துறையில் தாங்க முடியாத ஒன்று.

 இவர்கள்தான் அந்த பத்திரிகைகளின் முதலாளி போல, அந்தந்த மாவட்ட ஏரியாக்களில் அடிக்கின்ற கூத்து. இன்று இல்லீகல் பிசினஸ் அதாவது சட்டத்திற்கு புறம்பாக செயல்பட கூடியவர்களிடம் வசூல் செய்பவர்களில் முதல் ஆளாக இவர்கள் தான் இருக்கிறார்கள். இது பற்றி தேனி மாவட்டத்தில் எமது பத்திரிக்கை செய்தியாளரும், தமிழ்நாடு சமூகநலன் பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் முரளிதரன், அந்த மாவட்ட எஸ் .பி கே புகாரே பல செய்தியாளர்கள்  கையப்பமிட்டு கொடுத்திருக்கிறார்கள். 


நாடு, சமூகம் இதைப் பற்றி எல்லாம் எந்த சிந்தனையும் இல்லாமல், சமூக குற்றவாளிகளிடமே போய் பணம் வசூல் செய்தால், சமூகத்தில் குற்றவாளிகள் அதிகரிக்காமல், என்ன செய்வார்கள்? இந்த லட்சணத்தில் இந்த பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரம் கொடுப்பது பற்றி பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா இது பற்றிய ஆய்வு செய்யுமா? இவர்கள் எப்படி நாட்டின் நான்காவது தூணாவார்கள்?

 இந்த தகுதியற்ற கூட்டம், தகுதியான செய்தியாளர்கள், தகுதியான பத்திரிகைகள், சமூக குற்றவாளிகளுக்கு எதிரான செய்திகளை வெளியிடும்போது, இவர்களே காட்டிக் கொடுக்கும் எட்டப்பன் வேலையை பார்க்கிறார்கள். இவர்களுக்கு பின்னால் ரவுடிகள், பெரும்பாலும் சமூக குற்றவாளிகள் என்றாலே ரௌடிசம் இல்லாமல் இருக்காது .அவர்கள் ரௌடிசத்தை கையில் வைத்துக்கொண்டு தான், சமூக குற்றத்தில் ஈடுபடுவார்கள். இது காவல்துறைக்கு தெரிந்த ஒன்றுதான்.


இப்படிதான் தேனி மாவட்டத்தில் நடப்பதாக, தேனி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனுடைய நகல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இப்படியெல்லாம் இருந்தால், நாட்டில் எப்படி சமூக குற்றவாளிகள் திருந்துவார்கள்? உழைப்பவர்கள் எப்படி முன்னுக்கு வர முடியும்?தவிர, தகுதியான அரசியல் கட்சிகள், தகுதியான அரசியல்வாதிகள் எப்படி ஆட்சிக்கு வர முடியும் ? அதனால் தான், அவர்கள் எல்லாம் இப்போது இந்த சமூக குற்றவாளிகள் இடம் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் அரசியல் பின் புலத்தில் ஏதோ ஒரு அரசியல் கட்சியில், அமைப்புகளில் அல்லது பத்திரிகை சங்கம், பத்திரிக்கை அடையாள அட்டை இதையெல்லாம் பயன்படுத்திக் கொண்டு, இந்த சமூக குற்றவாளிகளோடு நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்கள்.

 இது தகுதியான பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இதனால் கொடுக்க வேண்டிய மதிப்பு, மரியாதை, சமூகம் எல்லாவற்றையும் ஒரே மாதிரி போல பார்க்கிறது .அதனால் தான், ஆரம்பத்தில் இருந்தே, இந்த பத்திரிகைகளின் தரம், தகுதி, என்ன? என்பதை மத்திய மாநில அரசின் செய்தித் துறைக்கு பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா ஆய்வு செய்து, அதன் தரத்திற்கு ஏற்றவாறு, அதன் தகுதிக்கு ஏற்றவாறு, சலுகை, விளம்பரங்கள் கொடுக்க வேண்டும்.நாட்டில் எல்லா துறைகளிலும் போலிகள் அதிகரித்து விட்டது. அதிலும், பத்திரிக்கை துறையில் அதிகமாக போலிகள் அதிகரித்து விட்டது. மேலும்,

 மக்களின் வரிப்பணத்தை சர்குலேஷன் என்ற சட்டம் தினசரி பத்திரிகைகளுக்கு போலியான ஊடக பிம்பத்தை ஏற்படுத்துவது மட்டுமல்ல,  இது போன்ற பத்திரிகையின் போலி சட்டங்களால், தற்போது சமூகத்திற்கும், நாட்டிற்கும் எந்த நன்மையும் இல்லாமல், தீமைகளும், குற்றங்களும் அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது. ஒருவன் எப்படி அரசியலில் ஈடுபட்டு எவ்வளவு தவறு செய்தாலும், அவனை கட்சி காப்பாற்றி நல்லவன் என்று சான்றிதழை இந்த பத்திரிகைகள் கொடுப்பது போல, சமூக குற்றவாளிகளுக்கு மறைமுகமாகவும், அவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, இன்று பல லட்சங்களை சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள் என்று உண்மையான, நேர்மையான பத்திரிகை செய்தியாளர்கள், பத்திரிகைகள் வேதனையும், கவலையும் தெரிவித்து காவல்துறைக்கு புகார் அனுப்பி வைக்கிறார்கள் என்றால்! அந்த மாவட்டத்தில் அவர்களுடைய நிலைமை என்னவாக இருக்கும்? அந்த அளவிற்கு தேனி மாவட்டம் ஒரு மோசமான சூழ்நிலையில் இருப்பது என்பது தெளிவாகிறது . 

எல்லா மாவட்டங்களிலும் இதே நிலைமை என்றாலும் கூட, ஒரு சில மாவட்டங்களில் உச்சபட்சமாக இந்த நிலைமை . இது பற்றி பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நாட்டு நலன் கருதி, சமூக நலன் கருதி இதையெல்லாம் வரைமுறைப்படுத்த தகுதியான பத்திரிகைகள், தகுதியான செய்தியாளர்கள், யார்? என்பதை எவை ?என்பதை வரைமுறைப்படுத்த வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் பத்திரிக்கை துறை தள்ளப்பட்டுள்ளது, என்பதை மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பிலும், தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும், இதை பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாக்கு தெரிவித்துக் கொள்கிறோம் .



Popular posts
பதஞ்சலி சித்தர் ஆதிஸேசனின் அவதாரம் .
படம்
அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்! சமூக பாதுகாப்பு உதவிகளுக்கு ! தொழிலாளர்கள் நல ஆணையத்தில் உறுப்பினராக, பதிவு செய்து கொள்க ......!
படம்
கடலூர் மாவட்ட பத்திர பதிவுத்துறை அதிகாரிகணேசன் மீது பொதுமக்கள் புகார் ஆட்சியர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதேன்?
படம்
தமிழ்நாடு முழுதும் ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் கோயில் நிலங்கள் மீட்பு .
படம்