கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே போர்ப் பதற்றும் . உலகப் போராக மாறுமா? - அச்சத்தில் உலக நாடுகள் .

 

ஆரம்பத்தில் ஊக்கரைன், ரஷ்யா இடையே ஏற்பட்ட போர்!பிறகு இஸ்ரேல், காசா இடையே ஏற்பட்டு, ஹமாஸ்டன் போர் மூண்டது. நாளடைவில் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் களம் இறங்கி உள்ளது. ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா, சீனா மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து ஆதரவு தெரிவிக்கிறது. இப்படி ஒவ்வொரு நாடும் தனது நட்பு நாடுகளிடையே ஆதரவாக போரிட்டால்! அது உலகப் போராக மாறுமோ, என்ற அச்சத்தில் உலக நாடுகள் இருந்து வருகின்றன.


அப்படி ஒவ்வொரு நாட்டிலும் போர் வந்து விட்டால், அங்கே பொருளாதாரம் கேள்விக்குறியாகும் .விலைவாசி உயர்வு அதிகரிக்கும். நாட்டில் மக்கள் பீதியிலும், அச்சத்திலும் வாழ்வார்கள். தொழில்கள் முடங்கும், மக்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் பொருளாதார நெருக்கடிகள் உருவாகி இருப்பவர்கள், இல்லாதவர்கள் என்ற பேதம் இல்லாமல், எல்லா மக்களும் ஒரு போராட்டமான சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

இந்தியாவுக்கு அப்படி ஒரு நிலைமை ஏற்படாது என்று தான் இந்தியாவின் வெளிநாட்டு வெளிப்புறவுக் கொள்கை கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் பிரதமர் மோடி! இதை சாணக்கியத்தனமாக வெளியுறவு கொள்கைகளை கையாண்டு வருகிறார். அதற்காக நேற்று முன்தினம் பிரதமர் மோடி ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார்.மேலும்,

 இந்த சூழ்நிலையில் நாடு ராகுல் காந்தி கையில் இருந்தால், என்ன ஆகும் என்று நினைத்துப் பாருங்கள் இந்திய மக்களே! இதையெல்லாம் எப்படி கையாள்வது? என்று கூட தெரியாமல், யாரோ ஒருவர் சொல்வதை தான் இவர்கள் செய்வார்கள். இவர்களுக்கு என்று அறிவோ, அருகதையோ கிடையாது. இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்தால் தான், நம்முடைய வாழ்க்கை இந்தியாவில் சுதந்திரமாக நம்முடைய தொழிலை செய்து நாம் வாழ முடியும். அதனால் தான் யார் வந்தால் என்ன? எவன் போனால் என்ன? என்று இருக்கின்ற மக்கள், வேறு ஒரு நாடு வந்து ஆக்கிரமிப்பு செய்தால் அங்கே இவர்கள் எல்லாம் நினைப்பதெல்லாம் நடக்காது .அவர்கள் போடும் சட்டம் தான் நடக்கும்.

 நீ என்னுடைய பொருள், என்னுடைய சொத்து என்று உரிமை கொண்டாட முடியாது. அவர்கள் எதை செய்தாலும் ,நீங்கள் வேடிக்கை தான் பார்க்க முடியும். அதனால், நாட்டின் அரசியல்! ஆட்சி! நிர்வாகம் எவ்வளவு முக்கியமானது? ஒவ்வொரு மனிதனுக்கும் என்பதை புரிந்து, இப்போதாவது கொள்ளுங்கள்.  தவிர,மோடியின் அர்பணிப்பு, தியாகம், இந்திய நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டு மக்களுக்கும் ஒரு சரித்திரம். எத்தனையோ பிரதமர்கள் வந்திருக்கிறார்கள். ஆனால், மோடி அரசியல் சாணக்கியன் என்பதை நிரூபித்தவர். 

கொரோனா காலத்திலும், காங்கிரஸ் கட்சி ஊழல் செய்து கடனாளி ஆக்கிவிட்டு போன இந்தியாவின்அரசியல்  வரலாறு ,அரசியல் தெரிந்த மக்களுக்கும், அரசியல் படிக்கின்ற மக்களுக்கும், இந்த உண்மை தெரியும். படிக்காதவர்கள், அரசியல் கட்சியின் சுயநலவாதிகளுக்கு இந்த உண்மை தெரியுமா? தெரியாதா? என்பது தெரியாது .

ஆனால், வெள்ளை வெட்டி, வெள்ளை சட்டை போட்டுக்கொண்டு, படிக்காத மக்களிடம் அரசியல் தெரியாத முட்டாள்களிடம், பந்தா காட்டிக் கொண்டு, ஊர் சொத்துக்களை கொள்ளை அடிக்கலாமா? அல்லது யாரை மோசடி செய்து மிரட்டலாம்? இதற்கு தான் இவர்கள் கட்சியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் கட்சியை எதற்கு பயன்படுத்த வேண்டும்? என்று கூட தெரியாமல், இவர்களையெல்லாம் அரசியல் கட்சி என்று இவர்களை வைத்து அரசியல் தெரிந்தவர்களை, இந்த அரசியல் கட்சிகள் முட்டாள் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

 அடியாள் வேலைக்கு தகுதியானவர்கள், அந்த வேலையை செய்து கொண்டிருப்பவர்கள், இவர்களையெல்லாம் ஒரு கட்சி பெயரை சொல்லி அரசியல் தெரியாதவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதை தெரிந்தவர்கள் எதிர்க்கிறார்கள். தெரியாதவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இது தெரியாத பத்திரிக்கை நடத்தக்கூடிய கார்ப்பரேட் நிறுவனம் வருமானத்திற்காக இந்த சமூகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.


 மேலும், இந்த கட்சிகளை நடத்துகின்ற திருமாவளவன், சீமான் இவர்களுக்கு எல்லாம் இந்த ஊடகங்களில் பேசி அரசியல் தெரியாதவர்களிடம், அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால், வருங்கால இளைய தலைமுறை நீங்கள் அரசியலை படிக்க வேண்டும். அரசியலை படிக்க வில்லை என்றால் உங்களுக்கு எதிர்காலம் கேள்விக்குறியாகும். நீங்கள் படிக்கவில்லை என்றாலும் ,அரசியலைப் படியுங்கள். அரசியல் கட்சிகளைப் படியுங்கள். அதற்கு என்ன தகுதி? என்பது யாரிடம் இருக்கிறது? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

 எதற்கு அரசியல்? கட்சி ஏன்? அரசியல் என்பதை முதலில் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் .இந்த உண்மையை தெரிந்து கொண்டால்! நாட்டில் உங்களை அரசியல் கட்சியினர் ஏமாற்ற முடியாது. இந்த பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சோசியல் மீடியாக்கள் சொல்லுகின்ற உண்மைகளும், பொய்களும் எங்களைப் போன்றவர்களால் புரிந்து கொள்ள முடியும். 

ஆனால், அது உங்களால் உடனே அதை புரிந்து கொள்ள முடியாது. அதனால் எல்லாவற்றையும் படியுங்கள். எது உண்மை? எது பொய்? என்பதை நீங்களே தேடிப் பாருங்கள். அதன் பிறகு ஆய்வு செய்து, உங்கள் முடிவு இறுதியானதாக இருக்கட்டும் .

Popular posts
பதஞ்சலி சித்தர் ஆதிஸேசனின் அவதாரம் .
படம்
பத்திரிக்கை என்றால் என்ன? எது பத்திரிக்கை?
நாட்டில் போலி அரசியல் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும், இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளால் போலியான பத்திரிகை ஊடக பிம்பத்தால் வாக்களிக்கும் மக்களுக்கு அரசியல் என்பது ஏமாற்றமா ? இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா ? பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா ?
படம்
தமிழ்நாட்டில் 2026 ல் ஆட்சியை பிடிக்கும் அரசியல் கட்சி எது ? - அரசியல் ஆய்வாளர்கள் .
படம்
அங்கீகாரமற்ற மனை பிரிவுகளை வரைமுறை படுத்த அரசின் விதிமுறைகளை தெரியாமல் பொதுமக்களை அலைகழிக்கும் நோக்கம் என்ன ?
படம்