உப்பாறு அணைக்கு நீர் வழங்க கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!

 

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகேயுள்ள, உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க வேண்டுமென வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள், பெண்களுடன் வந்து பி.ஏ.பி., அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.விவசாயிகள் கூறியதாவது: உப்பாறு அணைக்கு சட்டப்படி 1.3 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும்.

இதன் வாயிலாக நேரடியாக, 6,060 ஏக்கர் நிலங்களும், மறைமுகமாக, 10 ஆயிரம் நிலங்களும் பயன்பெறுகின்றன. மேலும், 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உப்பாறு அணை உள்ளது.தற்போது, பிஏ.பி., தொகுப்பு அணைகள் முழுவதும் நிரம்பிய நிலையில் உள்ளன. மழை பெய்தால் தண்ணீர் வீணாகி கேரளாவுக்கு சென்று கடலில் தான் கலக்கும். உபரிநீர் வீணாகாமல் தடுக்க திருமூர்த்தி அணைக்கு கொண்டு வந்து, அங்கு இருந்து உப்பாறு அணைக்கு நீர் வழங்கலாம். ஆனால், அதிகாரிகள் அவ்வாறு செய்வதில்லை.உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க கூறினால், திட்டக்குழுவிடம் கேட்டு முடிவெடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். எங்களது உரிமையை கேட்டால், அதற்குரிய பதில் இல்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், கலைந்து செல்லாமல் போராட்டம் தொடரும்.இவ்வாறு, கூறினர்.நேற்று இரவு வரை, அதிகாரிகள், போலீசார் பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்தது.

Popular posts
பதஞ்சலி சித்தர் ஆதிஸேசனின் அவதாரம் .
படம்
பத்திரிக்கை என்றால் என்ன? எது பத்திரிக்கை?
நாட்டில் போலி அரசியல் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும், இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளால் போலியான பத்திரிகை ஊடக பிம்பத்தால் வாக்களிக்கும் மக்களுக்கு அரசியல் என்பது ஏமாற்றமா ? இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா ? பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா ?
படம்
தமிழ்நாட்டில் 2026 ல் ஆட்சியை பிடிக்கும் அரசியல் கட்சி எது ? - அரசியல் ஆய்வாளர்கள் .
படம்
அங்கீகாரமற்ற மனை பிரிவுகளை வரைமுறை படுத்த அரசின் விதிமுறைகளை தெரியாமல் பொதுமக்களை அலைகழிக்கும் நோக்கம் என்ன ?
படம்