மதுரை ஐகோர்ட் கிளை 100 நாள் வேலை திட்டத்தை கொள்ளையடிக்கும் திட்டமா? என வேதனை.



மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் கிராம ஊராட்சிகளின் அவலங்களை அதிக அளவில் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற ஒரு பத்திரிக்கை மற்றும் இணையதளம். மேலும், ஊராட்சிகளில் நடக்கின்ற மோசடிகள், சகிக்க முடியாத ஒன்று.

 ஒவ்வொரு கிராமத்திலும் சமூக ஆர்வலர்கள், கிராமத்தின் நலன் விரும்பிகள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதாடி கொண்டிருப்பது தான் அவர்கள் வேலையா? இந்த அதிகாரிகள் எதற்காக இருக்கிறார்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இந்த ஊழல்களுக்கு எல்லாம் இது போன்ற வழக்குகள் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்தால்! முதலில் அங்கே வட்டார வளர்ச்சி அலுவலர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? அதற்கும் மேலே மாவட்ட ஆட்சியர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? அதற்கும் மேலே அந்த மாவட்டத்தின் பஞ்சாயத்து உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட திட்ட மேலாண்மை இயக்குனர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?ஒரு மாவட்டத்திற்கு 4 ஐஏஎஸ் அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இவ்வளவு அதிகாரிகள் இந்த மோசடிக்கு உடந்தையாக இருக்கிறார்களா ?மேலும், 

ஒருவர் இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு நாள்? தன்னுடைய வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு ,பொது நலனுக்காக வந்து இது போன்ற புகார் அளித்து, இந்த ஊழல்களை எல்லாம் கேட்க வேண்டும்? சம்பளம் வாங்குகின்ற இவர்களுக்கு அக்கறை இல்லை. ஆனால், சமூக ஆர்வலர்களுக்கு எந்த பலனும் எதிர்பார்க்காமல், அவர்கள் போராட வேண்டிய அவசியம் என்ன? அதனால், இது போன்ற ஊழல்கள், புகார்கள் சரியான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், அவர்கள் மீது நீதிமன்றம் அந்த நஷ்ட ஈடு இவர்களிடம் இருந்து வசூல் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் .மேலும்,

இது கரூர், அரவக்குறிச்சி மட்டும் நடக்கின்ற பஞ்சாயத்து முறைகேடு அல்ல, 100க்கு 99 தமிழ்நாடு கிராமங்கள் இந்த அளவில்தான் இருக்கிறது. இதை மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழக முழுதும் மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை, ஊராட்சி மன்ற தலைவர்கள் எத்தனை லட்சம்? எத்தனை கோடி கொள்ளை அடித்திருக்கிறார்கள்? என்பதை ஆய்வு செய்ய மத்திய அரசு அதிகாரிகளை நியமித்து, தமிழக முழுதும் எங்கெங்கு ஊழல் நடைபெற்றதோ, அந்தந்த ஊராட்சிகளில், ஊராட்சி மன்ற தலைவர்களிடம் இருந்து, அந்த பணத்த மதுரை ஐகோர்ட் நீதி அரசர் வசூல் செய்ய அரசாணை பிறப்பித்தால் இப் பிரச்சனைக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும் . மேலும்,

விவசாயத்தில் நடவு நட வடநாட்டு வேலை ஆட்கள் .

 இந்த திட்டத்தால் விவசாயமே அழிந்து விவசாயிகள் விவசாயம் செய்ய ஆட்கள் இல்லாமல் அல்லல் பட்டுக்கொண்டு போராடி வருகிறார்கள். மற்றொருபுறம், அரசாங்கம் இவர்களை உட்கார வைத்து சம்பளம் கொடுத்துக்  மக்களின் வரிப்பணத்தை பல ஆயிரம் கோடிகள் நாடு முழுவதும் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு மத்திய அரசு மாற்று ஏற்பாடு செய்தால், இந்த எதிர்க் கட்சிகள் ஓட்டுக்காக அவர்கள் மீது குறை சொல்லி அரசியல் செய்வார்கள் . மேலும், இதைப்பற்றி மதுரை உயர்நீதிமன்ற கிளை,

 100 நாள் வேலை திட்டத்தை பெரும்பாலான ஊராட்சி தலைவர்கள் கொள்ளையடிக்கும் திட்டமாக பயன்படுத்தி வருகின்றனர்,''என ஐகோர்ட் மதுரை கிளை வேதனை தெரிவித்து உள்ளது.கரூர் அரவக்குறிச்சி கிராம பஞ்சாயத்தில் நடந்த முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை கூறியதாவது: மஹாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை பெரும்பாலான ஊராட்சி தலைவர்கள் கொள்ளையடிக்கும் திட்டமாக பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும்,இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கும் கருத்து என்னவென்றால்,100 நாள் வேலை திட்டத்தை இப்படி அரசு அதிகாரிகளும், ஊராட்சி மன்ற தலைவர்களும் பங்கு போட்டு சாப்பிடுவதற்கு பதிலாக, அந்த பணத்தை தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்தால், பல லட்சக்கணக்கானபடித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு இது ஒரு முக்கியத்துவமாக இருக்கும். ஆனால், ஓட்டுக்காக அரசியல் செய்கின்ற அரசியல் கட்சிகள், இதை வைத்து எதிர்க்கட்சிகள், மத்திய அரசை குறை சொல்லி, அரசியல் செய்து கொண்டிருப்பார்கள் .


 அதனால், இப் பிரச்சனையில் மத்திய அரசு தமிழக முழுவதும் இந்த முறைகேடுகளை ஆய்வு செய்து, இந்த கணக்கு வழக்குகளை முறையாக ஆடிட் செய்து, தவறு செய்த ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்தால், தொடரும் இந்த முறைகேடுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும். 

மேலும், தாங்கள் சொன்னது போல் மகாத்மா என்ற பெயரை வைத்துக் கொண்டு முறைகேடு செய்வது வியப்பாக உள்ளது. இத்திட்டத்தை அமல்படுத்த அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை முறையாக கண்காணிப்பதில்லை. தங்களுடைய பொறுப்பை உணர்ந்து, அவர்கள் செயல்படுவதும் இல்லை என்று கூறிய நீதி அரசர், இதற்கு மத்திய ஊழல் தடுப்பு பிரிவு இயக்குனரகம், தமிழக ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் மற்றும் கரூர் மாவட்ட கலெக்டர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார் . இந்த கணக்கு வழக்குகளை மத்திய அரசின் ஆடிட்டர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, ஆடிட் செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

Popular posts
பதஞ்சலி சித்தர் ஆதிஸேசனின் அவதாரம் .
படம்
பத்திரிக்கை என்றால் என்ன? எது பத்திரிக்கை?
நாட்டில் போலி அரசியல் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும், இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளால் போலியான பத்திரிகை ஊடக பிம்பத்தால் வாக்களிக்கும் மக்களுக்கு அரசியல் என்பது ஏமாற்றமா ? இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா ? பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா ?
படம்
தமிழ்நாட்டில் 2026 ல் ஆட்சியை பிடிக்கும் அரசியல் கட்சி எது ? - அரசியல் ஆய்வாளர்கள் .
படம்
அங்கீகாரமற்ற மனை பிரிவுகளை வரைமுறை படுத்த அரசின் விதிமுறைகளை தெரியாமல் பொதுமக்களை அலைகழிக்கும் நோக்கம் என்ன ?
படம்