திருவண்ணாமலைக்கு பௌர்ணமி, அமாவாசை, சிவராத்திரி ,சித்ரா பௌர்ணமி போன்ற விசேஷ நாட்களில் லட்சக் கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து செல்கிறார்கள். அப்படி இந்த கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சித்ரா பௌர்ணமிக்கு நேற்று வந்த பக்தர்கள் கூட்டம் அதிகப்படியானது என்று பக்தர்கள் பேசி வந்தனர்.
அதுமட்டுமல்ல,இந்த அண்ணாமலையார் திருத் தலத்திற்கு சரியான பஸ் வசதி இல்லை . அதனால், பக்தர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி இருந்துள்ளனர். ஒரு பக்கம் போக்குவரத்து சரி செய்யவில்லை . அதாவது ஐந்து கிலோ மீட்டருக்கு முன்னாலே பஸ் நிறுத்தப்பட்டது. அங்கிருந்து மக்கள் இலவச மினி பேருந்து மற்றும் ஆட்டோ இவைகளின் மூலம் கோயிலுக்கு கிரிவலம் சென்றுள்ளனர் . இவையெல்லாம் தேவையற்றது. பிறகு இரவு கிரிவலப் பாதை இறங்கும் வழியில் அதே பஸ்களை இயக்கி உள்ளனர். இப்படி எதையும் முறையாக செய்வதில்லை.
இது தவிர, இந்த அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ரயில் நிலையம் இருந்தும், ரயில் போக்குவரத்து வசதியை அமைச்சர் வேலு ஏன் அதை செய்யவில்லை ? சொந்தத் தொகுதியில், சொந்த ஊரிலே இந்த லட்சணம் என்றால், மற்றவை எப்படி இருக்கும் ? இதையெல்லாம் செய்யாமல் அமைச்சர் வேலு, இந்து மதத்திற்கு எதிரான தேவையில்லாத ஒன்றை செய்து வருகிறார். அது என்ன என்றால்? கிரிவலப் பாதையில் கருணாநிதியின் சிலையை வைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
அதுமட்டுமல்ல, தினந்தோறும் சித்தர்கள், மகான்கள் செல்லுகின்ற இந்த கிரிவலப் பாதையில் கருணாநிதி சிலையை வைத்துப் பார்க்கட்டும் அன்றே அவர்களுக்கு பீடைப் பிடித்தது என்கிறார்கள். திருவண்ணாமலையில் அண்ணாமலையாரின் கோபம் விரைவில் திமுகவிற்கு உண்டு என்கிறார்கள் ஆன்மீகவாதிகள் . கருணாநிதி தமிழ்நாட்டுக்கு செய்த தியாகம் என்ன? தியாகிகளுக்கே முக்கியத்துவம் இல்லை. தியாகிகளை போற்றுவதற்கு நினைப்பதற்கு ஆள் இல்லை .கருணாநிதியால் தமிழ்நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய அளவில் கிடைத்த அரசியல் பொக்கிஷம்,ரவுடியிசம், ஊழல். மற்றும் மது கடைகள் திறந்தது .
இதுதான் கருணாநிதியின் அரசியல் வரலாறு . அதனால் கருணாநிதியின் சிலை இந்த ஆன்மீக பூமியில் ஒரு காலம் வேலுவின் கனவு நிறைவேறாது என்கின்றனர்- திருவண்ணாமலை மாவட்ட மக்கள் .