ஆட்சிக்கு
வந்த புதிதில் திமுக வேண்டுமென்று தேவையில்லாத பிரச்சனைகளில் தலையிடுவது ,தேவையற்றது விஷயங்களை பேசுவது, அரசியலுக்கு அதுக்கும் சம்பந்தமில்லாத பேச்சுக்களை எல்லாம் முதல்வர் ஸ்டாலின் முதல் அமைச்சர்கள் வரை பேசி தீர்த்து விட்டார்கள்.
ஒரு பக்கம் கவர்னர் ஆர் என். ரவியுடன் மோதல், மற்றொரு பக்கம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் மோதல், மோடி இங்கே வரும்போது எல்லாம் கோ பேக் மோடி
என்று பலூனை பறக்க விட்டார்கள் .இப்படிப்பட்ட திமுக இன்று பிஜேபி
காலில் சாஷ்டாங்கமாக விழுந்து விட்டார்கள். இதுதான் திராவிட மாடல்.
இதையெல்லாம் விட கூட்டணி கட்சியான திருமாவளவனை வைத்து பேச வைப்பது, கம்யூனிஸ்டுகளை பேச வைப்பது, காங்கிரஸை பேச வைப்பது இப்படி எல்லாம் திமுக ,பிஜேபியுடன் அரசியல் செய்து பார்த்தது. ஆனால், இவர்களுடைய அரசியல் எடுபடவில்லை .அதனால் ஒட்டு மொத்தமாக சரண்டர் ஆகி விட்டார்கள்.
அது மட்டுமல்ல, உதயநிதி ஸ்டாலின் செங்கல்லை தூக்கி காண்பித்தார். முட்டையை தூக்கி காண்பித்தார் .அவங்க அப்பன் வீட்டு பணமா என்று கேட்டார். எல்லாவற்றையும் பேசிவிட்டு, இப்போது மோடியை அழைக்க அழைப்பிதழ் கொடுக்க டெல்லி செல்கிறார். இதற்கெல்லாம் மோடி கவிழ்ந்து விடுவாரா? இல்லை,
அவர் என்ன செய்வார் தெரியாது என்று சொல்கிறார்களே அதை செய்வாரா?
மேலும்,
இதற்கெல்லாம் காரணம் தமிழ்நாட்டில் ஒவ்வொரு அமைச்சராக சிறைக்கு செல்ல காத்திருப்பதால், திமுக வேறு வழியில்லாமல் ஒட்டுமொத்தமாக பாஜகவிடம் சரண்டர் ஆகிவிட்டதா? தவிர,
இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரசுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், இருந்தால் பிஜேபிக்கு அரசியல் லாபம் தானே, இதையெல்லாம் அரசியல் ஆட்டம் ஆடுகின்ற அரசியல் கட்சிகள், மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை .ஆட்சியைப் பற்றியும், ஊழல் செய்து சேர்த்த சொத்துக்களை பற்றியும், கவலைப்படுகிறார்கள்.
சட்டத்தின் பிடியிலிருந்து எப்படி வெளிவருவது? மோடி
இந்த அமலாக்கத்துறை, சிபிஐ விசாரணை, வருமானவரித்துறை இதையெல்லாம் நிறுத்தி எங்களை காப்பாற்றுவார? இங்கே
மோடி என்ன செய்யப் போகிறார? இதுதான்
அரசியல் தெரிந்தவர்களின் கேள்வி ? இவரை நம்பி பிஜேபி காரர்கள், திமுகவை எதிர்த்து பேசி வருகிறார்கள். ஆனால், மேடையில் இருவரும் கைகுலுக்கி பேசிக்கொள்கிறார்கள் .இது ஒரு பக்கம் நாட்டின் முதலமைச்சர் ,பிரதம மந்திரி என்ற பதவிக்கு அவர்கள் கொடுத்துக் கொள்ளும் மரியாதை என்று பேசினாலும் இதில் அரசியல் இல்லாமல் இல்லை.
மோடி அதிமுக ,திமுக இரண்டும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஊழல்கள் செய்து மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கும் இந்த நிலையில் ,இவர் இந்த கட்சிகளுடன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கூட்டணி வைப்பாரா? அல்லது
பாஜக தலைமையில் தனிப்பெரும் கூட்டணி வைத்து போட்டியிடுவார்களா? இங்கே,
திமுக ,அதிமுகவை தவிர மற்ற கட்சிகள் வளரக்கூடாது, வரக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் முதல்வர் மு .க. ஸ்டாலினுக்கும் உள்ள
ரகசிய உறவு ஒப்பந்தம் .ஆனால், மக்கள் எத்தனை நாளைக்கு முட்டாள்களாக இருப்பார்கள்? அல்லது முட்டாளாக்கிக் கொண்டு இருக்க முடியும்?
மேலும், உங்களுடைய கார்ப்பரேட் கம்பெனி பத்திரிக்கை,, தொலைக்காட்சிகள் உங்களுக்கு ஆதரவான செய்திகளை மட்டுமே கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். அதனால், மக்கள் யாரும் அதை நம்ப தயாராக இல்லை. அதை உங்கள் அரசியல் கட்சி கூட்டங்கள் கைதட்டி பார்த்துக் கொண்டிருக்கும். பொதுவானவர்கள் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், மோடி இந்த இரண்டு கட்சிகளின் கூட்டணியில் ஏறி தேர்தலில் வெற்றி பெறுவதைவிட தனித்து நின்று அரசியலில் வெற்றி ,தோல்வி காண்பது தான் பாஜகவின் கொள்கைக்கு சிறந்தது .
அது
மட்டுமல்ல, ஊழல் என்ற முத்திரை இரண்டு கட்சிகளிலும் பதியப்பட்டுள்ளது .அதேபோல, அதிமுக, திமுக என்ற ஊழல் கட்சிகளுடன் பிஜேபி அரசியல் களத்தில் நின்றால், மக்களின் நம்பிக்கை கேளிக்குறியாக்கிவிடும் .அதனால், நாட்டு மக்கள்தான் முக்கியமே தவிர, அரசியல் கட்சிகள் முக்கியமல்ல என்பதை பிரதமர் மோடியும், பிஜேபியும்,எடுத்துக் கொள்வார்களா ?அல்லது வெற்றிக்காக கூட்டணி தான் முக்கியம் என்பார்களா? இதுதான் அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி ?