கள்ளத்தனமான மது விற்பனையில், ஏழு மலைவாழ் கிராமங்கள் சீரழியும் நிலைமை ஏன் ?

 


மது போதைக்கு அடிமையான மக்கள், தமிழ்நாட்டில் வேலை செய்யும்  வலிமையும், திறமையும் அற்றவர்களாக இருப்பதால், வடமாநிலங்களில் இருந்து வேலைக்கு பணியமத்தப்படுகிறார்கள். இதனால், இங்குள்ள தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்துவிட்டது. இதற்கு காரணம் மது போதைக்கு அடிமையான மக்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள திமுக கட்சியினர் கள்ள சந்தையை திறந்து வைத்துள்ளார்கள்.


அதில் ஒரு பாட்டில் விலை 130 என்றால், அவர்கள் விற்பனை செய்வது 210 அல்லது 30 இது போன்று விற்பனை செய்து லாபம் பார்க்கிறார்கள். இது அரசு விற்பனை செய்யும் மது கடைகளில் வருகின்ற வருமானத்தை விட ,அதிக அளவில் இந்த கள்ள சந்தை விற்பனை வியாபாரம் அமோகமாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் பொதுமக்கள். மேலும், இந்த கள்ளச் சந்தை வியாபாரம் விடியற்காலை 5 மணியிலிருந்து நடைபெற்று வருகிறது என்கிறார்கள் .


தவிர,இதைப் பற்றி காவல்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை, டாஸ்மாக் அதிகாரிகள் அனைவருக்கும் பங்கு என்கிறார்கள் பொது மக்கள். மேலும், திமுக அரசு தனது கட்சிக்காரர்களுக்கு இதன் மூலம் வருவாய் வருவதால் கண்டும் காணாமல் இருக்கிறார்கள். ஆனால் பொதுமக்கள் எவ்வளவு பாதிக்கிறார்கள் என்பதை பற்றி தமிழக அரசு நினைத்துக் கூட பார்க்கவில்லை. மேலும், தேனி மாவட்டத்தில் உள்ள ஹைவேஸ் பேரூராட்சியில் ,ஏழு மலைவாழ் கிராமங்களில் சுமார் 5000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். 

இவர்களில் 3000 திற்கும் மேற்பட்டோர் தேயிலை தோட்டத்தில் 50 ஆண்டு காலமாக கூலித் தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகிறார்கள். இந்தப் பகுதி கடுமையான குளிர் மிகுந்த பகுதி .அதனால், தேயிலைத் தோட்ட கூலி தொழிலாளர்கள் இந்த குளிரை பொருட்படுத்தாமல் ,வேலை செய்ய சுமார் 90% தொழிலாளர்கள் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாக்கப்பட்டுள்ளனர்.


அதனால்,  இந்த பகுதியில் அரசு மதுபான கடை நடத்தாமல், கள்ள சந்தையில் விற்பனை செய்து கொண்டிருக்கும் மது பாட்டல்களை வாங்கி குடிக்கும் நிலைமைக்கு இந்த ஏழு கிராமங்கள் இருந்து வருகிறது. இதனால் இந்த கூலி தொழிலாளர்கள் வாங்குகின்ற சம்பளம் இந்த கள்ளச் சந்தை மது விற்பனையாளர்களிடமே போய் சேருகிறது. மேலும், அவர்கள் வாங்கும் கூலி 400 ரூபாய் என்றால், மதுவுக்காக செலவழிக்கும் ரூபாய் 300/-, இப்படி கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் இந்த தொழிலாளர்கள் பணம் இந்த கள்ளச் சந்தை மது விற்பனையாளர்களிடம் சேர்ந்து விடுகிறது.

 இதனால் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள், வாழ்க்கை வாழ்வதா? சாவதா? என்ற போராட்டத்தில் பெண்கள்.  அவர்களுடைய வாரிசுகள் படிக்க முடியாமல்  கூலிகளாக தொடர்கிறார்கள். இந்த நிலைமை மாற வேண்டும். அரசு அதிகாரிகள் நடவடிக்கை என்ற பெயரில் நடவடிக்கை எடுக்கக் கூடாது. உண்மையாகவே இப்பகுதிக்கு சென்று, இங்கு உள்ள நிலைமை என்னவென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ,அரசும், அரசாங்கமும் மக்களுக்கு வாங்குகின்ற சம்பளத்திற்கு மனசாட்சியோடு வேலை செய்பவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தவிர, இப்பகுதியில் உள்ள வனத்துறை சோதனை சாவடி அதிகாரிகள் போல் நடவடிக்கை எடுக்கக் கூடாது. காரணம் இவர்கள் எப்போது சோதனை செய்கிறார்களோ, அப்போது இந்த கள்ளச் சந்தை மது பாட்டில்கள் அப்பகுதியில் செல்லாது. கள்ளச் சந்தை வியாபாரிகள் போகும்போது அங்கு சோதனை சாவடி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள் .ஆனால், மற்ற நேரங்களில் அப்பாவி மக்கள் இந்த கூலித் தொழிலாளர்கள் பையைப் பிடிங்கி சோதனை செய்வது போல், காட்டும் அதிகார தோரணை தாங்க முடியாத வேதனை.

 இப்படி சட்ட விரோத செயல்களை செய்பவர்களுக்கு உடந்தையாக அதிகாரிகள் இருப்பதால், மக்கள் எவ்வளவு தொல்லைகளையும், துன்பங்களையும் அனுபவிக்கிறார்கள் ? அவர்கள் குடும்பம் எவ்வளவு பாதிக்கப்படுகிறது ? இது எல்லாம் இந்த ஏழைத் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கையின் கண்ணீர் கதை என்பதை பொதுமக்களும், அரசு அதிகாரிகளும், புரிந்து கொள்வார்களா ? புரிந்த அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

 மேலும், இந்த பிரச்சனை குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி சார்பில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு தேனி மாவட்டம் கம்பம் ஒன்றியத்தில் இருந்து  புகார் மனு அனுப்பியுள்ளனர். இனியாவது இதற்கு நடவடிக்கை எடுப்பார்களா? இல்லை, பணம் தான் எங்களுக்கு முக்கியம் எத்தனை கிராமங்கள் அழிந்தாலும் கவலை இல்லை என்று இருப்பார்களா? இதற்கு விடியல் எப்போது ? -சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக நலன் பத்திரிகையாளர்கள் . MURALI .

Popular posts
Tamil Nadu Government Journalists Identity Card? Or circulation ID card of magazines? Can you give a proper explanation for this? - Press Officers.
படம்
ஒரு கரும்பு , ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி இதனுடைய மொத்த மதிப்பு என்ன? - இதுதான் திமுக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பா? இல்லை மக்களை ஏமாற்றம் தொகுப்பா?
படம்
பத்திரிக்கை என்றால் என்ன? எது பத்திரிக்கை?
கோயில் நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் பல ஆயிரம் கோடி சொத்துக்களை ஆக்கிரமித்துள்ள மதுரை சோழிய பிராமண சங்கம் அறக்கட்டளை - ஆலய பாதுகாப்பு இயக்கம்- தமிழ்நாடு.
படம்
அங்கீகாரமற்ற மனை பிரிவுகளை வரைமுறை படுத்த அரசின் விதிமுறைகளை தெரியாமல் பொதுமக்களை அலைகழிக்கும் நோக்கம் என்ன ?
படம்