மேலும்
பிள்ளைகளின் கல்வி அவசியத்தை கருதி கிராமத்தில் உள்ள இளைஞர்களின் மூலம், கல்வி கற்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு, தேவையான உணவு வழங்கப்படும் என போராட்டக் குழுவினர்
தெரிவிக்கின்றனர் .அரசாங்கம் மக்கள் நலனுக்காக இருக்க வேண்டுமே ஒழிய, வியாபார நோக்கத்திற்காக இருக்கக் கூடாது .அது மத்திய அரசாங்கமாக இருந்தாலும்,மாநில அரசாங்கமாக இருந்தாலும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.
இங்கே பரந்தூர் விமான நிலையம் அமைத்தால்,சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து எத்தனை பேர் இந்த விமான நிலையத்தில் பயணம் செய்யப் போகிறார்கள்? அடுத்தது, இங்கே எடுப்பது விவசாய நிலம், இந்த நிலத்தை கையகப்படுத்தும் மத்திய மாநில அரசுகள், அவர்களுக்கு இழப்பு ஈட்டுத் தொகை கொடுத்தாலும் ,அந்த மக்களின் சந்தோஷம், நிம்மதி இவர்களால் கொடுக்க முடியுமா? ஒரு இடத்தில் இருந்து மக்கள் இன்னொரு இடத்திற்கு சென்று வாழும்போது அந்த நிம்மதியும் சந்தோஷமும் அவர்கள் அடைய முடியுமா ?இந்த இரண்டு கேள்விக்கு இவர்களால் பதில் சொல்ல முடியாது.
அடுத்தது சட்டரீதியான பிரச்சனையில் 50 சதவீதத்திற்கு மேல் இத்திட்டத்திற்கு ஆதரவாக கிராம மக்கள் இருந்தால் தான், இவர்கள் விமான நிலையத்தை அந்த இடத்தில் அமைக்க முடியும் . மேலும் ,இந்த மக்கள் உயர் நீதிமன்றத்தில் இப் பிரச்சினையை கொண்டு சென்றால், நிச்சயம் இந்த அரசாங்கத்தால் இங்கே விமான நிலையம் கொண்டுவர முடியாது .ஏனென்றால், இது முடியாட்சி அல்ல, குடியாட்சி .மக்கள் விரும்பினால் தான் அந்த இடத்திலிருந்து இவர்களை காலி செய்ய முடியும். தவிர, இவர்கள் ஆடு, மாடுகளா?
இவர்களை கொண்டு போய் வேற இடத்தில் விட்டு விடுவதற்கு, மேலும், இப் பிரச்சனையில் சில ஜாதி கட்சிகள் அவர்களுக்கு நல்லது செய்வது போல, போராட்டத்தை அறிவித்து, இவர்களை வைத்து பேரம் பேசி லாபம் அடைகின்ற திட்டமும் இதில் உள்ளது. அதனால், கிராம மக்கள் விழிப்புடன் இப் பிரச்சனையை அணுகி செயல்பட வேண்டும் .இதில் பெரிய கார்ப்பரேட் கம்பெனியான அதானி குழுமமும், முதல்வர் ஸ்டாலின் குடும்பத்திற்கான அரசியல் ஆதாயமும் இருப்பதால், ஆளும் கட்சியினர் ,அதிகாரம் கையில் இருக்கிறது என்று இந்த கட்சிக்காரர்களும், ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் எப்படியும் பேசுகிறார்கள். இதில் மனிதாபிமான மற்ற சிந்தனையுடன் தான் அனைவரும் பேசுகிறார்கள்.
அதுமட்டுமல்ல, இங்கே விமான நிலையம் வரும் என்று தெரிந்து கொண்டு இப் பகுதியில் இப்போதே பினாமிகளை வைத்து மந்திரிகளும், எம்எல்ஏக்களும், அதிமுக, திமுக அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் நிலத்தை விலைக்கு வாங்குகிறார்கள் .அதனால், இந்த கிராம மக்கள் ஒற்றுமையுடன் போராடினால், மத்திய மாநில அரசுகள் ஒன்றும் செய்ய முடியாது .இந்த விமான நிலையத்தை எங்கு மக்கள் அதிகம் வசிக்காத பகுதியோ ,எங்கு விளைநிலங்கள் இல்லாத பகுதியோ, அங்கு கொண்டு போய் விமான நிலையத்தை அமையுங்கள் .
விமான
நிலையம் மக்களுக்கு சோறு போடாது. விமான நிலையத்தால் பயனடைபவர்கள் ஏழை எளிய நடுத்தர மக்கள் இல்லை .இதனால் பயனடைபவர்கள் வசதி வாய்ப்பில் இருப்பவர்கள் மட்டுமே, அதனால், இந்த மக்கள் உணர்வுகளை மதித்து, அவர்களுடைய கருத்துக்களை ஏற்று திட்டத்தை கைவிடுவது மத்திய மாநில அரசுக்கு நல்லது. இல்லையென்றால், இந்த 20க்கும் மேற்பட்ட கிராம மக்களின் எதிர்ப்புகள் நிச்சயம் மத்திய மாநில அரசுக்கு உறுதி .