எம் பி சி (MBC) பட்டியலில் இருந்து அந்நிய மாநில (40) ஜாதிகளின் பெயர் பட்டியலை நீக்க வேண்டும். திமுக அரசு அதை நீக்கவில்லை என்றால்,வன்னியர் சமூகத்தின் போராட்டம் தொடரும் - வன்னியர் சத்ரிய சாம்ராஜ்ய நிறுவனத் தலைவர் சி ஆர் ராஜன்.

 


MBC இட ஒதுக்கீடு 1971 சட்டநாதன் ஆணையத்தின் அறிக்கை படி ஆந்திரா கர்நாடகா கேரளாவை சேர்ந்த அந்நிய மாநிலத்தின் 40 ஜாதிகள் இந்த எம்பிசி பட்டியலில் இருக்கிறது அதை உள்ளே கொண்டு வந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி .இது அவருடைய திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சி. அதை நீக்க வேண்டும் என்று வன்னியர் சத்ரிய சாம்ராஜ்யம் நிறுவனத் தலைவர் சி ஆர் ராஜன் தெரிவித்துள்ளார். 


மேலும் அரசியலில் ராமசாமி படையாட்சியார் இருந்த காலம் அதாவது 1957 - 1972 அது வன்னியர்களுக்கான பொற்காலம். அவர் காலத்தில் 19 எம்எல்ஏ,4 எம்.பி., (தற்போது அது 60 எம்எல்ஏ) அது மட்டும் அல்ல கல்வியில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு MBC - 17%(G.O..353/31.1.1957)

இதில் வன்னியருக்கு மட்டும் 13%.

இது தவிர குற்ற பரம்பரை நீக்குதல் ,TNBC-தலைவர், உறுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் என சாதனை புரிந்துள்ளார். இது தவிர வன்னியர் நலனுக்காக பல திருமணங்களை கொண்டு வந்தார்.

அது. தீர்மானம்:1. இருபது ஏக்கருக்கு மேலுள்ள வன்னிய மிராஸ்தாரர்கள், அறக்கட்டளைகள் அனைத்து கிராமங்களிலும் உருவாக்கி வன்னிய ஏழை மாணவர்களுக்கு பாதி சம்பளமும், அதற்குக் குறைந்தவர்கட்கு கல்வி இனாமும் தரப்பட வேண்டும்.

2. உத்தியோக விஷயத்தில் வன்னியர் நலனைக் கவனிக்க ஒர் தனி இலாகா நிறுவப்பட வேண்டும்.

3. சர்வீஸ் கமிஷனில் பிற்படுத்தப்பட்டவர்களான வன்னியர்கள் மூவர் அங்கத்தினராயிருந்து தங்கள் வகுப்பு நலனைக் கவனிக்க அரசு நியமிக்க வேண்டும்.

4.அரசுப்பணிக்கு,வயது, கல்வி, தொழிற் கல்லூரிகளில் அனுமதி, அந்தஸ்து இவைகளில் ஹரிஜனங்கட்குக் காட்டும் சலுகை வன்னியர்களுக்கும் காட்டப்பட வேண்டும்.

5. வன்னிய ஏழை மாணவர்களின் கல்விக்காக ஐந்து கோடி நிதியுடன் வன்னியர் நல ஆணையம் & விசாரணை கமிட்டி அமைக்க வேண்டும்.

இப்படி இருந்த வன்னியர் சமுதாயத்தின் நிலைமை இன்று 40 அன்னிய மாநில ஜாதிகளின் பெயர் பட்டியல் எப்படி உள்ளே வந்தது? இது அரசியல் சூழ்ச்சி தானே, அதனால், கீழ்கண்ட இந்த 40 அந்நிய மாநில ஜாதிகளின் பெயர்களை திமுக அரசு உடனடியாக நீக்க வேண்டும். இல்லையென்றால் ,அதை எதிர்த்து போராடுவோம் என்று வன்னியர் சத்ரிய சாம்ராஜ்யம் நிறுவனத் தலைவர் சி. ஆர். ராஜன் தெரிவித்துள்ளார்.



மேலும், அவ்வாறு சேர்க்கப்பட்ட ஜாதிகளின் விவரம் பற்றி வன்னிய சமூகம் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா? எந்தெந்த மாநிலத்தில், எந்தெந்த ஜாதிகளை உள்ளே கொண்டு வந்து சேர்த்து இருக்கிறார்கள்? என்பதை புரிந்து கொண்டால் ,இந்த அரசியல் சூழ்ச்சி சமூக மக்களுக்கு புரிந்து விடும் அதன் விவரம் வருமாறு :

ஆந்திராவை பூர்வீகம் கொண்டவர்கள்.

1.இசை வேளாளர் என்கிற சின்னமேளம் - மாண்புமிகு மு..ஸ்டாலின் சாதி.

2. ஏகலா 3. ஒட்டர்4. குலாலா5. கொல்லவார்6. சாட்டாடி7. சாத்தாத ஸ்ரீ வைணவர்

8. சாத்தானி9. சில்லவார் 10. டொம்மரர்11. தாசரி12. தெலுங்குப் பட்டிச்செட்டி

13. தொக்களவர் 14. தொட்டியநாயக்கர் 15. தொழுவநாயக்கர் 16. பட்டுராசு

17. பெஸ்தா18. போயர்19. மகேந்திரா20. மங்கலவாடு21. மேதரா

22. மொண்டகொல்லா 23. ராஜகம்பளம் 24. ஜோகி.மேலும்,


கர்நாடகாவை பூர்வீகம் கொண்டவர்கள்.

25. கும்பரர்26. குருகினிச்செட்டி 27. குறும்பர்28. கொரச்சாசிவியர்

29. மௌன்டாடன் செட்டி 30. யோகீசுவரர்31. ராஜகா32. ஜங்கம் மேலும்,

 

கேரளாவை பூர்வீகம் கொண்டவர்கள்.

33. அகசா34. துளுவர்35. புரணோபகாரி 36. மடிவாளா37. ராஜகுல வௌக்குத்தலவர் 38. வெளுத்தேடர் 39. வௌக்குத்தலவநாயர்

40. வட இந்தியர்- நரிக்குறவர்.

தவிர எம் பி சி MBC என்பது  வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கிடாக இருந்த போது ,எப்படி இவ்வளவு ஜாதிகளை MBC பட்டியலில் கொண்டு வர முடியும்? இதைக் கொண்டு வந்து ,வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை இவ்வளவு ஜாதிகளும் அதை பங்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வன்னியர் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.மேலும்,

 

இது வன்னிய சமூகத்தின் மறுக்கப்பட்ட உரிமை. அந்த உரிமையை அரசியல் சூழ்ச்சியால் பறிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மறைக்கப்பட்ட உரிமையை மீண்டும் பெற்றிட, வன்னியர் சமூகம் ஒன்றிணைந்து போராட வேண்டும் .அப்படி போராடவில்லை என்றால் வருங்கால சந்ததிகளின் வாழ்க்கை மிகவும் அடிமட்ட நிலைக்கு வன்னியர்களை கொண்டு சேர்த்து விடும் என்பதை உணர்ந்து ஒன்றிணைந்து போராட வேண்டும். மேலும்

 திமுக அரசு உடனடியாக இதை நீக்கவில்லை என்றால், இதற்காக வன்னியர் சமூகத்தின் போராட்டம் தொடரும் என்று வன்னியர் சத்ரிய சாம்ராஜ்ய நிறுவனத்தின் தலைவர் - சி ஆர் ராஜன் தெரிவித்துள்ளார்.

Popular posts
பறையர் இன மக்களுக்கு தங்கள் வரலாறு தெரியாமல், ஆளுக்கு ஒரு கருத்து பேசுகிறார்கள் . இதுபற்றிய கடந்தகால வரலாற்று உண்மைகள் என்ன?
படம்
தமிழக ஆளுநர் ஆர். என். ரவி அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்பட்டார் என்று சட்டத்தை மீறிய தவறான தீர்ப்பா? - உச்சநீதிமன்றம்.
படம்
Tamil Nadu Government Journalists Identity Card? Or circulation ID card of magazines? Can you give a proper explanation for this? - Press Officers.
படம்
கூட்டுறவு துறை என்றாலே அது ஊழல் துறை! ஏன் அப்படி? கூட்டுறவுத் துறையில் ஊழல் தொடர்கிறது?
படம்
நீதித்துறையில் சில நீதிபதிகளின் தீர்ப்பு! விமர்சனத்திற்கு உள்ளாவதால், இதை ஆய்வுக்கு உட்படுத்த உச்ச நீதிமன்றம் ஆய்வுக் குழு அமைக்குமா?
படம்