தமிழ்நாடு முழுதும் ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் கோயில் நிலங்கள் மீட்பு .


ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்டெடுத்து வருகின்றனர், இந்த இயக்கத்தினர் .

இந்த இயக்கம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி, தமிழகத்தில் பல கோயில்கள் சிதிலமடைந்து, சீர்குலைந்து இருந்தாலும் ,அதற்கு திருப்பணி கும்பாபிஷேகம் நடத்தி பொதுமக்களுக்கு வழிபாடு செய்ய அதற்கான ஆயத்த பணிகளை செய்து வருகின்றனர் .





இந்த இயக்கத்தை தமிழக மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவர்களுடைய போராட்டம் ஆட்சியாளர்களுக்கு எதிராக இருந்தாலும், பொதுமக்களின் நன்மைக்காக இப்போராட்டங்களை ஏற்படுத்தி அதில் வெற்றியும் பெற்று வருகிறார்கள்.

 இப்படித்தான் மதுரை மாநகரில் நடந்த கண்ணகி மலைக்கோயில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் 11 4 2022 நடைபெற்றது. அந்த போராட்டத்தில் தேனி நகரத்தில் கண்ணகி மலைக்கோயிலை நிலைநாட்டி திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த இந்து அமைப்புகள், அனைவரும் சென்று வர சாலை வசதி, குடிநீர் வசதி கழிப்பிட வசதி, பந்தல் அமைக்கும் பணி என்று பல்வேறு திட்டங்களை கோரிக்கையாக வைத்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.





 மேலும் கண்ணகி கோயில் தனிநபர் அறக்கட்டளை மூலம் வரவு செலவு செய்யக்கூடாது. தனிநபர் யாரும் உண்டியல் வசூல், காணிக்கை வசூல் எதுவும் செய்யக்கூடாது. இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



 மேலும் இந்தக் கோயில் தமிழக எல்லையில் அமர்ந்திருந்தாலும், கேரளாவுக்கு மிக அருகில் இருப்பதால், இது கேரளாவா அல்லது தமிழ்நாடு என்ற குழப்பங்களை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும் .இது தவிர ,கண்ணகி கோயில் சம்பந்தமாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் ராஜேந்திரன் அவருடைய டிரஸ்ட் மூலம் வசூல் செய்வது, உண்டியல் வசூல் செய்வது, இப்படி பணத்தை வசூல் செய்து, எந்த வேலையும் செய்யாமல் அதிகாரிகளும் இவர்களும் பங்கு போட்டுக்கொள்வது, இந்த ஆலயப் பாதுகாப்பு இயக்கம் தொடர்ந்து அதற்கு கண்டனம் தெரிவித்து அது போன்ற தவறான செயல்பாடுகளை செய்யக்கூடாது என்று இந்து அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் ,தமிழகத்தின் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்களுக்கும் தங்கள் கோரிக்கைகளை அனுப்பி வைத்துள்ளனர்.

 இதுபோன்ற ஆலய பாதுகாப்பு இயக்கம் இந்துக்களுக்கு ஒரு பெரும் நம்மை என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி பல கோயில்களின், கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது ஒவ்வொன்றாக அகற்றி, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதை ஆன்மீக அன்பர்களும் பொதுமக்களும் மிகவும் பாராட்டி வரவேற்றுள்ளனர்.

Popular posts
பதஞ்சலி சித்தர் ஆதிஸேசனின் அவதாரம் .
படம்
அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்! சமூக பாதுகாப்பு உதவிகளுக்கு ! தொழிலாளர்கள் நல ஆணையத்தில் உறுப்பினராக, பதிவு செய்து கொள்க ......!
படம்
நாட்டில் மத்திய மாநில செய்தித் துறைக்கு பத்திரிகைகளின் தரத்தை நிர்ணயிக்க வேண்டியது காலம் வந்து விட்டதா ? பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா பத்திரிக்கை துறையை வரைமுறைப்படுத்துமா ?
படம்
கடலூர் மாவட்ட பத்திர பதிவுத்துறை அதிகாரிகணேசன் மீது பொதுமக்கள் புகார் ஆட்சியர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதேன்?
படம்