அங்கீகாரமற்ற மனை பிரிவுகளை வரைமுறை படுத்த அரசின் விதிமுறைகளை தெரியாமல் பொதுமக்களை அலைகழிக்கும் நோக்கம் என்ன ?

  



அங்கீகாரமற்ற வீட்டு மனை பிரிவுகளை வரைமுறைப்படுத்த அரசின் விதிமுறைகளை ஒரு முறைக்கு, நான்கு முறை அரசு அதிகாரிகள் படிக்கவேண்டும்.

 ஆங்கிலத்தில் புரியவில்லை என்றாலும், தமிழில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதை ஆன்லைனில் எடுத்து கூட படிக்கலாம். அப்படி இருந்தும் இவர்கள் எதற்காக ஒரே விதிமுறையை பயன்படுத்துகிறார்கள் என்பது தான் புரியவில்லை?

 இரண்டாயிரத்தி 16 க்கு முன்னால் அங்கீகாரமற்ற வீட்டு மனைகள் விற்பனை செய்து, பத்திர பதிவு நடந்திருக்க வேண்டும். மேலும் அதற்கு இரண்டாயிரத்து 17 இல் தமிழக அரசு வெளியிட்ட அரசு விதிமுறைகளை அதிகாரிகள் அலட்சியம் செய்வதும், தெரியாமல் இருப்பதும் வெட்கக்கேடானது. இது தவிர, ஒருவேளை அந்த விதிமுறைகளை தெரிந்தும் பணம் கொடுக்காதவர்களை அலை கழிப்பது உள் நோக்கமா? அல்லது அந்த அரசின் விதிமுறையை சரியாக தெரிந்து கொள்ளாமல் அலைகழிக்க படுகிறார்களா? என்பது கடவுளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

 ஏனென்றால் இதனால் லட்சக்கணக்கான பொது மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் ரியல் எஸ்டேட் வியாபாரிகளும் உண்டு. ரியல் எஸ்டேட் வியாபாரிகள் இல்லாமல் தனி நபர்களும் உண்டு. இதுபற்றி மக்கள் அதிகாரத்தில் பலமுறை செய்திகள் வெளியிட்டும், தமிழக அரசின் உயரதிகாரிகள் டிடிசிபி உதவி இயக்குனர்கள் மீதும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீதும் ,எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 இதற்கு மேல் பொது மக்கள் எங்கு சென்று முறையிடுவார்கள்? நீதிமன்றம் தான் செல்ல வேண்டும். அதற்கு இந்த அதிகாரிகள் அத்தனை பேரும், இவர்கள் தவறுக்கு உடந்தை என்று தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும். அதுதான் நியாயமான தீர்ப்பு. இதுபற்றி இன்னும் விளக்கமாக தெரிவிக்கிறேன். 2017 இல் வெளியிட்ட அரசாணையில் அங்கீகாரமற்ற வீட்டு மனை பிரிவுகளில், ஒரு வீட்டுமனை பிரிவாவது அதில் வரைமுறைப்படுத்த பட்டிருந்தால், அந்த வீட்டு மனை பிரிவு அனைத்திற்கும், வரன்முறை படுத்தப்பட்ட அரசின் விதி முறையில் அவை வந்துவிடும்.

 ஆனால் இவர்கள் விற்கப்பட்ட மனைகளுக்கு மட்டுமே அந்த அரசின் விதிமுறை என்று தவறாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லாம் தெரியாமல் அந்த சீட்டில் உட்கார்ந்து வேலை பார்ப்பது மிகக் கேவலம். மேலும் இந்த விதிமுறைகளை எல்லாம் நாங்கள் எடுத்துச் சொல்லியும், வேறுசில விவரம் தெரிந்த அதிகாரிகள் சொல்வதை கூட அலட்சியப் படுத்துவதன் உள்நோக்கம் என்ன? ஒன்று பணம் எதிர்பார்ப்பு அல்லது இந்த உண்மை தெரியாது இருக்கலாம்.

இதைப்பற்றி இனியாவது உயரதிகாரிகள் இவர்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்லி, பொதுமக்களை இப்பிரச்சனையில் இருந்து: காப்பாற்றுவார்களா?










Popular posts
பதஞ்சலி சித்தர் ஆதிஸேசனின் அவதாரம் .
படம்
பத்திரிக்கை என்றால் என்ன? எது பத்திரிக்கை?
நாட்டில் போலி அரசியல் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும், இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளால் போலியான பத்திரிகை ஊடக பிம்பத்தால் வாக்களிக்கும் மக்களுக்கு அரசியல் என்பது ஏமாற்றமா ? இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா ? பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா ?
படம்
தமிழ்நாட்டில் 2026 ல் ஆட்சியை பிடிக்கும் அரசியல் கட்சி எது ? - அரசியல் ஆய்வாளர்கள் .
படம்