சித்தர்களில் முதன்மை பெற்றவர்கள் திருமூலரும், சிவவாக்கியரும், இவர்களுள் ஆன்மீகத்திலும், சமுதாயத்திலும் தன் பாடல்கள் மூலம் மிகப்பெரிய புரட்சி செய்தவர் சிவவாக்கியர்.
சிவவாக்கியர் செய்த சமுதாய புரட்சி, சமுதாயத்தில் அனைவரும் சாதிபேதம் காட்டுவது மூடர் செயல், என்று சாதி எதிர்ப்புணர்வை சிவவாக்கியர் கொள்கையாகக் கொண்டவர். இதனை அவருடைய காதில் வாளி காரை கம்பி பாடகம் பொன் ஒன்றலோ ,சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையே என்ற பாடல் மூலமாக சாதி எதிர்ப்பு உணர்வை காட்டுகிறார்.மேலும்
தனிமனித வாழ்வு, மனித வாழ்வு மிக உயர்ந்தது என்று சிவ வாக்கியர் அவர் உடம்பை மிகவும் எச்சரிக்கையாக பாதுகாக்க வேண்டும். மனிதர்கள் சிற்றின்பத்தில் மூழ்கி சீரழியக் கூடாது. பேரின்பம் ஆசிய பேரின்பம் ஆசிய இறைநிலையை அடைய வேண்டும் என்று கூறியவர், மனத்தூய்மை இன்றி செய்யும் தெய்வ வழிபாடு பயன்தராது.
மேலும், அவர் சிறந்த வாழ்க்கை என்பது அன்பு, இரக்கம், தொண்டு ஆகியவற்றை கொண்டவரின் வாழ்க்கை தான் சிறந்த வாழ்க்கை என்று கூறியவர் சிவவாக்கியர் ஆவார் .
சிவவாக்கியர் வரலாறு, இவர் தம் பாடல்களின் இறுதியில் சிவாயமே என்று பல பாடல்கள் பாடியுள்ளார். சிவத்தைத் வாக்கியமாக கொண்டவர், சிவத்தை சிவவாக்கியர் என பெயர்கள், சிவவாக்கியர் நம்மை வளர்த்த தரமும் தந்தை திருவாளன் வைணவர்! வைணவர் என்பதால் சிவவாக்கியரும் வைணவத்தில் இருந்து சைவர் ஆனார்.
சிவவாக்கியர் இறுதியில் கும்பகோணத்தில் சித்தி அடைந்தார் என்று கூறப்படுகிறது .இன்றும் பௌர்ணமி நாள்களில் கும்பகோணத்தில் அவர் சமாதியில் பூசை நடைபெற்று வருகிறது. இவர் யோகம் சார்ந்த பாடல்களை இயற்றியுள்ளார். சிவவாக்கியரின் 550 பாடல்கள் உரையுடன் இடம்பெற்றுள்ளன.
உடல் நிலையாமை, உடல் எத்தகைய அழகானதாக இருந்தாலும், உயிர் நீங்கிய பின்னர் அது துர்நாற்றம் வீசும் ,என்பதை அறிந்து உலகோர் சுடுகாட்டுக்கு கொண்டு சென்று பிணத்தை அழிப்பர். மேலும், அறியாமல் அழகில் மயங்கி அறிவு இழக்கின்றனர். உடல் பற்றுகளை துறக்க வேண்டும் என்பது சிவவாக்கியரின் கருத்தாகும்.
இதனை வடிவு கண்டு கொண்ட பெண்ணை, மற்றொருவன் நத்தினால் விடுவனோ! அவனை முன்னர் வேட்டை வேண்டும் என்பதே நடுவன் வந்து அழைத்தபோது,நானும் இந்த நல்லுடல் சுடலை மட்டும் கொண்டுபோய், தோட்டி கை கொடுப்பதே ,என்று உடலின் நிலையாமை பற்றி எடுத்துரைக்கிறார்.
வாழ்க்கை இளமை, நிலையாமை. ஓடம் போன்றது வாழ்க்கை. படகு நன்றாக இருந்தால், படகில் அங்கும், இங்கும் உலாவலாம். போவதும் வருவதும் உறுதி என்று நினைக்கலாம். ஆனால் படகு ஆனது உடைந்துவிட்டால், படகில் போவதும் இல்லை. வருவதும் இல்லை.
இந்த ஓடம் போன்றதுதான் வாழ்க்கை. இளமை இருக்கும்போது, அது நிலையானது என்று நினைக்கிறோம். ஆனால் இறக்கும் தருவாயில் தான் இந்த உடல் நிலையற்றது என்று எண்ணுகிறோம். ஓடம் உள்ள போதெல்லாம், ஓடியே உலாவலாம். ஓடம் உள்ள போதெல்லாம் உறுதி பண்ணிக்கொள்ளலாம். ஓடம் உடைந்தபோது, ஒப்பிலாத வெளியிலே! ஆடும் இல்லை. கோளும் இல்லை. யாரும்இல்லை. ஆனதே என்ற பாடல் மூலம் இளமை நிலையில்லாதது என்பதை உணர்த்துகிறார் .
சிவவாக்கியர் சமுதாய புரட்சியில் அவர் கூற வரும் கருத்து முதன்மையானது. சாதி பேதம் பார்ப்பது தவறு. சாதி பேதம் பார்ப்பது வேதனையான செயல் என்று கண்டிக்கிறார். சாதி வேறுபாடு பார்ப்பவர்களை மூடர்கள், பித்தர்கள் மாயையில் உள்ளவர்கள். அறிவும், தெளிவும் இல்லாதவர்கள் என்று கூறுகிறார். விலங்குகளுக்கும் ஜாதி உண்டு. மனிதர்களுக்குள் ஜாதி இல்லை. எவ்வாறெனில் பசுவும் ,எருமையும் கூடினால் கரு உண்டாவது இல்லை.
ஆனால், பறைச்சி உடன், மேல் ஜாதி என்று சொல்லும் ஆண் காமம் கொண்டால், கரு உருவாகும். இவ்வுலகில் எதுவுமே இழிவானது இல்லை. பறைச்சி, பணக்காரி இருவரும் ஒருவரே. அவர் இறைச்சி தோல் ,எலும்பு இவற்றில் எல்லாம் இவள் பறைச்சி, இவள் பணத்தை என்ற ஏற்றத் தாழ்வுகள் எழுதப்பட்டிருப்பது இல்லை, என்று உணர்ந்து மனிதர்களுக்குள்ளே வேறுபாடு பார்க்கக் கூடாது என்கிறார் சிவவாக்கியர்.
இதனை பறைச்சியாவது ஏதடா, பணத்தியாவது ஏதடா, இறைச்சி தோல் எலும்பிலும், இலக்கமிட்டு இருக்குதோ என்று கேள்வியாக கேட்கிறார். ஏற்றத்தாழ்வு பார்ப்பது, இழிவான செயல் என்கிறார். எனவே எங்கள் சாதி உயர்ந்தது, உங்கள் சாதி தாழ்ந்தது என்ற பேதமே வேண்டாம் என்கிறார்.
இதனை சிவவாக்கியர் சாதியாவது ஏதடா, சலம் திரண்ட நீர் அளவு காதில் வாளி காரை கம்பி பாடகம் பொன் ஒன்றலோ, சாதிபேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையை என்று உலக மக்கள் நீங்களே பகுத்துப் பார்த்து தெளிவு அடையுங்கள். மனிதர்களுக்குள் வேறுபாடு கிடையாது என்கிறார். நினைவு நல்லது வேண்டும், எண்ணம் நல்லதாக இருக்கும் என்றாள் ,எல்லாம் நல்லதாகவே இருக்கும். நினைவு நல்லது வேண்டும் என்கிற எண்ணத்தை விதைக்கிறார…?