பதஞ்சலி சித்தர் ஆதிஸேசனின் அவதாரம் .



சித்தர்களை வணங்கும் போது 

நம்முடைய முன்வினை தீவினை அகற்று நமக்கு நிச்சயம் நல்லது நடக்கும் . .அந்த வகையில் அவரவர் நட்சத்திரத்திற்கு உரிய சித்தர்களை நாம் வணங்கினால் அந்த 

சித்தரின் அருள் நமக்கு கிடைக்கப் பெற்று வாழ்க்கையில் வளமும் நலமும் உண்டாகும் என்கின்றனர் சித்தர்கள்.; மேலும் சித்தர்கள் தெய்வத்தின் நேரடி காட்சி கிடைக்கப் பெறுவார்கள். ஆனால் நமக்கு கனவில் மட்டுமே தோன்றுவார்கள். அது கூட 

சிலருக்கு அந்த பாக்கியம் கூட 

கிடைக்காது. சித்தர்கள் ஒவ்வொருவருடைய மனது மற்றும் பாவ புண்ணியங்களை 

பார்த்துதான் அருள் புரிவார்கள். 

அந்த அருள் கிடைக்க கூட 

புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.; தவிர, அவர்களுடைய ஜீவசமாதி பல ஜென்ம பாவங்களை தீர்க்க வல்லது எல்லா தெய்வங்களும் கைவிட்ட நிலையில் ஒருவர் மகான்களின் ஜீவசமாதியை வழிபட்டு வரும்போது அதற்குரிய நற்பலன் அந்த 

சித்தர்கள் மூலம் நிச்சயம் அவருக்கு 

கிடைக்கும். 

அப்படிப்பட்ட பேரருள் மனம் படைத்த 

சித்தர்கள் நாம் மனதார பிரார்த்திக்கும் போது நம்மை அவர்கள் வாழ 

வைப்பார்கள் என்பது உறுதி. இங்கு பதஞ்சலி சித்தர் ஆதிசேஷனின் 

அவதாரமாக இருந்து வந்தவர். அவரை வணங்கி வரும்போது சர்ப்ப தோஷங்கள் குரு தோஷங்கள் எல்லாம் விலகி நற் பலன் கிடைக்கும் என்கின்றனர். மேலும் அவருடையவாழ்க்கை வரலாறு மற்றும் ஜீவ சமாதி ராமேஸ்வரம் மற்றும் சிதம்பரத்தில் உள்ளது .மேலும் பதஞ்சலி சித்தர் பிறந்த மாதம் : பங்குனிபதஞ்சலி சித்தர் பிறந்த நட்சத்திரம் : மூலம் ,பதஞ்சலி சித்தர் வாழ்ந்த காலம் : 5 யுகம் 7 நாட்கள்பதஞ்சலி சித்தர் குரு : நந்தி பதஞ்சலி சித்தர் சீடர் : கௌடபாதர்

பதஞ்சலி சித்தர் ஜீவசமாதி அடந்த தலம் : சிதம்பரம்.இவர் பிரம்மதேவரின் 

கண்ணிலிருந்து தோன்றியவர். சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக 

பிரகாசிப்பவருமான அத்திரி மகரிஷிக்கும் , மும்மூர்த்திகளின் குழந்தைகளாகிய அனுசுயாதேவிக்கும் மகனாய் பிறந்தவர். ஆதிசேஷன் அவதாரமாக தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின் கடும் விஷமூச்சுகாற்று பட்ட அனைத்தும் 

சாம்பலாகிவிடும். எனவே இவர் தன் சீடர்களுக்கு அசரீரி யாகவே உபதேசம் செய்வார்.


ஆயிரம் கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் ஏற்றிய வியாகரண சூத்திரம் என்னும் 

நூலை தம்முடைய சீடர்களுக்கு நேருக்கு நேராய் உபதேசிக்க என்னினார். கௌட

பாதர் என்ற சீடர் மட்டும் , பதஞ்சலி 

முனிவர் ஏவிய பணிக்காக வெளியே சென்றுவிடுகிறார். பதஞ்சலி முனிவர் 

தமக்கும் சீடர்களுக்குமிடையே ஒரு 

கனமான திரையை போட்டுக் 

கொண்டார். திரையின் பின் அமர்ந்து 

உபதேசத்தை ஆரம்பித்தார். சீடர்களுக்கு பரமானந்தம். இத்தனை நாள் அசரீரியாக ஒலித்த குருவின் குரலை பக்தர்கள் கேட்டு மகிழ்ந்தனர்.பதஞ்சலி முனிவர்களிடமிருந்து வந்த கருத்து மழையில் திக்கு முக்காடிய சீடர்களுக்கு , இந்த கம்பீரமான 

குரலுக்குறிய குருநாதரின் திரு முகத்தை திரை நீக்கி பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலால் , திரையை பிடித்திழுக்க.....அடுத்த கனம்.....ஆதிஷேடரின் கடும் விஷக் காற்று தீண்டி , அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாகினர்

முனிவர் பயந்தது நடந்தது. அது சமயம் கௌடபாதர் வருவதை கண்டு முனிவர் உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நண்பர்கள் அனைவ ரும் சாம்பலாகியதை கண்டு கதரினார். பொறுமையை இழந்ததினால் வந்த விணை. ' கௌடபாதர் , நீ மட்டும்தான் என் சீடர் என்பது விதி 

என்பதால் உனக்கு சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன் ' என்றார் பதஞ்சலி முனிவர். அதன்படி கௌடபாதருக்கு அனைத்து வித்தைகளும் கற்றுத் தந்தார் பதஞ்சலி. பின்பு பதஞ்சலி சித்தர் ஆதிசேஷ அவதாரத்தில் ஆனந்த தரிசனம் கண்டு சிதம்பரத்தில் ஜீவசமாதி அடைந்தார்.ஓம் பதஞ்சலி முனிவர் திருவடிகள் போற்றி.பதஞ்சலி முனிவர் தியானச்செய்யுள்ஆயசித்தி அனைத்தும் பெற் சத்திய சித்தரேசப்தரிஷி மண்டலத்தில் 

பிரகாசிப்பவரேபக்தியுடன் வணங்கும் எமக்கு

நல்லாசி தரவேண்டும் பதஞ்சலியாரே

பதஞ்சலி சித்தரின் பூஜை முறைகள்: 

தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளினால் மெழுகி அரிசிமாவினால் 

கோலமிட்டு அப்பலகையின் மேல் பதஞ்சலி 

முனிவரின் திருவுருவப்படத்தினை 

வைக்க வேண்டும். படத்தின் முன்பாக 

அலங்கரிக்கப்பட்ட திருவிளக்கினை 

வைத்து, நல்லெண்ணை ஊற்றி பஞ்சு திரி போட்டு இரண்டுமுக தீபமேற்ற வேண்டும், பொன்றி வஸ்திரம் அணிவித்து 

பொன்னிற மலர்களையும் பிச்சிப்பூ, 

முல்லைப்பூ போன்ற மலர்களாலும் 

பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பதினாறு போற்றிகள்

1. ஒரு நிலைப்பட்ட மனதை உடையவரே போற்றி!2. ஆதி சேஷனின் அவதாரமே 

போற்றி!3. ஒளிமயமானவரே போற்றி!

4. மந்திரத்தின் உருவமானவரே போற்றி!

5. கருணாமூர்தியே போற்றி!

6. கடும் விசக்காற்று மூச்சுடையவரே 

போற்றி!

7. பூலோகச் சூரியனே போற்றி!

8. ஞான வழிகாட்டுபவரே போற்றி!

9. பேரும் புகழும் உடையவரே போற்றி!

10. இன்மொழி பேசுபவரே போற்றி!

11. இகபரசுகம் தருபவரே போற்றி!

12. மகாவிஷ்ணு பிரியரே போற்றி!

13. அஷ்டமா சித்திகளையுடைவரே 

போற்றி!14. அங்ஞானம் அகற்றுபவரே 

போற்றி!

15. யோக சூத்திரம் அருளிய யோகியே போற்றி!

16. யோகங்கள் அனைத்தையும் தரும் பதஞ்சலி முனிவரே போற்றி!

இவ்வாறு பதினாறு போற்றி சொல்லி அர்ச்சனை செய்தவுடன் ஓம் க்லம் 

பதஞ்சலி சித்த பெருமானே போற்றி என்று 108 முறை பக்தியுடன் கூறி வழிபட வேண்டும்.நிவேதனம்: இளநீர், 

கடுக்காய் தண்ணீருடன் தேன் கலந்த 

தீர்த்தம், பசும்பால், வாழைப்பழம் 

போன்றவை நிறைவாக தீபாராதனை செய்ய வேண்டும்.பதஞ்சலி முனிவரின் பூஜையின் பலன்கள்:1. ஜாதகத்தில் உள்ள வியாழ கிரக தோஷ நிவர்த்தியுண்டாகும்

2. குடும்ப ஒற்றுமை உண்டாகும்

3. செல்வம் பெருகும், மகிழ்ச்சியுண்டாகும்

4. எலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமடையும்5. நன் மக்கட்பேறு உண்டாகும்

6. கல்விக்கலைகளில் சிறந்து விளங்குவார்கள்

7. தடைகள் நீங்கி எல்லாவற்றிலும் 

வெற்றியுண்டாகும்

8. உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் 

விலகும்.

9. எல்லா நலன்களும் சூழ இன்புற்று வாழ்வார்கள்.

இவரை வழிபட வியாழக்கிழமை சிறந்த 

தினமாகும்.


 

Popular posts
Tamil Nadu Government Journalists Identity Card? Or circulation ID card of magazines? Can you give a proper explanation for this? - Press Officers.
படம்
ஒரு கரும்பு , ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி இதனுடைய மொத்த மதிப்பு என்ன? - இதுதான் திமுக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பா? இல்லை மக்களை ஏமாற்றம் தொகுப்பா?
படம்
பத்திரிக்கை என்றால் என்ன? எது பத்திரிக்கை?
கோயில் நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் பல ஆயிரம் கோடி சொத்துக்களை ஆக்கிரமித்துள்ள மதுரை சோழிய பிராமண சங்கம் அறக்கட்டளை - ஆலய பாதுகாப்பு இயக்கம்- தமிழ்நாடு.
படம்
அங்கீகாரமற்ற மனை பிரிவுகளை வரைமுறை படுத்த அரசின் விதிமுறைகளை தெரியாமல் பொதுமக்களை அலைகழிக்கும் நோக்கம் என்ன ?
படம்