வாசகர்கேள! கடந்த இதழில், . பத்திரிகை என்பது சான்று பெற்ற ISO அல்லது அக்மார்க் பொருளோ அல்ல. மேலும், இதன் தரத்தை எடை போடுபவர்கள் சமூகத்தில் அறிவுசார்ந்த வல்லுனர்கள். சிந்தனையாளர்கள் தான் இவைகளை தரம் பிரித்து பேசும் தகுதி படைத்தவர்கள். அப்படி பேசுபவர்கள் கூட சமூக அக்கரையுள்ள நடுநிலையாளர்களாக இருக்க வேண்டும்.
. அப்போது தான் உண்மையை தெளிவாக அவர்களால் வெளிப்படுத்த முடியும். அவர்களால் யார் எந்த வடிவில் செய்தியைச் சொன்னாலும் அதை உள்வாங்கி அதன் நோக்கத்தை புரிந்துக் கொள்ள முடியும். அப்படிப்பட்டவர்கள் சமூகத்தில் மிகக் குறைந்தவர்களே! மேலும் ,
இன்றைய தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் வியாபார நோக்கமாகி விட்டது. சமூக அக்கறை இல்லாமல் ,.
பத்திரிகையும், தொலைக்காட்சியும் நடத்தும் கார்ப்பரேட் கம்பெனிகள் எப்படி அதிக லாபம் ஈட்டுவது என்று போட்டி போடும் நிலை தான்.
இதற்கு மத்திய-மாநில அரசுகள் கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தை வீண் அடிக்கிறது. சமூக அக்கரையில்லாமல் வியாபாரம் நோக்கத்தில் செயல்படும் ஊடகங்களுக்கு அரசு விளம்பரமும், அரசு சலுகைகளும் ஏன்? செய்திதுறையின் உயர் அதிகாரிகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை.
மேலும் தேவையற்ற செய்திகளை யெல்லாம் போட்டு விளம்பரப்படுத்தும், விளம்பர பத்திரிகைகளுக்கு கூட, கோடிக் கணக்கில் விளம்பரம் அரசு கொடுக்கிறது.
இதைவிட, கொடுமை பத்திரிகை நடத்த தகுதியில்லாதவர்கள் கூட இன்று ஏதோ ஒரு பத்திரிகை நடத்துகிறார்கள். பணம் கோடி கணக்கில் வைத்திருந்தால் கூட பத்திரிகை நடத்த முடியாது.
அப்படித்தான் இன்றைய கார்ப்பரேட் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும், தமிழ்நாட்டில் அதிகரித்து விட்டது. இதனால், பத்திரிகையின் மதிப்பும், கௌரவமும் பொதுமக்களிடம் குறைந்துள்ளது.
மேலும் அர்த்தமில்லாமல் பத்திரிகை நடத்துபவர்களை பார்க்கும் சில அதிகாரிகள் எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக பார்க்கக் கூடாது.பத்திரிகை நடத்துவது மிகவும் கஷ்டமான காரியம். அதற்கு மக்களின் ஆதரவும், அரசின் ஆதரவும் கட்டாயம் தேவை.
இதனால் உண்மையை உணர்ந்து தமிழக அரசும், செய்தித்துறையின் உயர் அதிகாரிகளும் தினசரி பத்திரிகையா? வாரப் பத்திரிகையா? மாதப் பத்திரிகையா? என்று அரசு செய்தியை விளம்பரப் படுத்துவது மட்டுமே பத்திரிகை என்று முடிவு செய்துவிடாதீர்கள்.
செய்தியின் முக்கியத்துவம் மக்களுக்கும் அரசுக்கும் சொல்ல வேண்டிய முக்கிய கருத்துகள் மேலும் சமூக மக்களின் விழிப்புணர்வுக்கு பத்திரி கையின் கடமை முக்கியம்.
மேலும் பெரிய, பெரிய பக்கங்கள் அச்சடிப்பதால் பெரிய பத்திரிகை என்று முடிவு செய்து விடாதீர்கள். எனவே, இதையெல்லாம் எந்த பத்திரிகையிலும், தொலைக்காட்சியிலும் இடம்பெற்று இருக்கிறதோ அதற்கு முக்கியத்துவம்!கொடுங்கள்!
அதுதான் பத்திரிகை! |
ஆசிரியர்.
இன்றைய பெரிய பத்திரிகைகள்!
சின்ன விஷயங்களை அதாவது மோட்டார் பழுது தண்ணீர் வரலை, அதற்கு போராட்டம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு நடந்ததை போட்டு விளம்பரப்படுத்தி விட்டு குற்றங்கள் அதிகரிப்புக்கு அதுவும் ஒரு காரணம்.
அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன தீர்வு? அதை போடாமல் பக்கங்களை நிரப்புவதில் யாருக்கும் எந்த பயனும் இல்லை .
இனியாவது பொதுமக்களுக்கும், தமிழக அரசுக்கும் செய்தித்துறை அதிகாரிகளுக்கும் உண்மைகள் தெரிந்திருக்குமே! போலி அரசியல்வாதிகளையும், ஊழல்வாதிகளையும் மக்களிடம் முன்னிலைப் படுத்துவது நேர்மையான அரசியல் நிர்வாகத்தை மக்களுக்கு கொடுக்க முடியாது.
இது சமூகத்திற்கு எப்படிப்பட்ட தவறானது. இதற்கெல்லாம் செய்தித்துறை ஒரு முக்கிய தீர்வை எடுத்தே தீரவேண்டும். இல்லையென்றால் பொது நல மிக்கவர்களும், பத்திரிகையாளர்களும் இதுபற்றி முக்கிய முடிவு எடுக்க உள்ள னர். - - ஆசிரியர்